பாதுகாப்பு இல்லாத அரசு பேருந்துகள்? நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்? - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 7 June 2024

பாதுகாப்பு இல்லாத அரசு பேருந்துகள்? நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?




நீலகிரிமாவட்டம் உதகையிலிருந்து  பெங்களுருக்கும்,பெங்களுரிலிருந்து  உதகைக்கும்  இயக்கப்படும்  பேருந்துகளால் கடும் இன்னலுக்கு  பயணிகள்  உள்ளாகி இருக்கின்றனர்.


பொதுவாக நீண்ட தூர அதுவும் இரவு நேரபயணம்  என்றாலே பயணிகளின்  உடல் மற்றும் உள்ள நலன்களில்  அக்கறை  எடுத்துக்  கொள்ள  வேண்டியப்  பொறுப்பு  எல்லா தனியார் மற்றும்  அரசு  போக்குவரத்து கழகங்களுக்கு  உள்ளது.


இந்நிலையில்,உதகையிலிருந்து பெங்களுருக்கும்,பெங்களூரிலிருந்து  உதகைக்கும்  இயக்கப்படும் தமிழ்நாடு  அரசுப்  பேருந்துகளில்  பயணித்து  அவதிக்குள்ளாகும்  பொதுமக்களின்  நிலை மிகவும் பரிதாபமாகும். 


உதகையிலிருந்து பெங்களூருக்கு இரவு உதகையிலிருந்து  இரண்டு பேருந்துகள் முறையே இரவு எட்டு முப்பது   மணிக்கும்,இரவு பத்து மணிக்கும் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள்  சாதாரணக் கட்டணத்தில்  அதாவது 303 ரூபாய் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன.


இந்த பேருந்துகள் ஆரம்பத்தில் புதிய பேருந்துகள்  இயக்கப்பட்டு, உதகை கோடை சீசன் காலத்தில்  உதகையின்  சுற்றுலாத் தலங்களை  பார்வையிடும்  circuit பேருந்துகளாக  இயக்கப்படுவதற்கு  இந்த பேருந்துகளே மாற்றப்பட்டு  பழைய பேருந்துகளே பெங்களூருக்கு  இன்று வரையிலும், இயக்கப்படுகின்றன.


இந்த பேருந்துகளில்  பெரும்பாலும் கைப்பிடிகளை  காணமுடியவில்லை.உடைந்த ஓட்டை ஒடிசல்  பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் கூடலூர் மற்றும் மைசூரு  பேருந்து நிலையங்களில் நிறுத்தப்படும்போது  அவற்றை 'ஸ்டார்ட்'செய்வதற்கு  இந்த நவீனத்  தொழில்நுட்பக்காலத்தில்  ஒரு சூப்பர் முறையை பின்பற்றுவதை  கண்டு ஆச்சர்யப்படாதவர்களே  இருக்க முடியாது. 


பேருந்தின்  பானட்டை  திறந்து ஒரு கம்பியை வைத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில்  இடிக்கும் போது மட்டுமே 'ஸ்டார்ட் 'ஆகிறது. 


இந்த பேருந்துகள் அதிகாலை  பெங்களுருக்கு  சென்று அடையும்வரை  எந்தவித  உத்தரவாதமும்  இல்லை . இதுவே  தமிழ்நாடாக  இருந்தால்  ஏதாவது ஒரு அரசுப் பேருந்தில்  ஏற்றிவிடலாம். ஆனால்,இந்த பேருந்துகள் இடைநில்லா பேருந்துகள் அதாவது Non stop பேருந்துகள் என்ற பெயரில்  எங்கு இடையில் நின்று விடுமோ  என்று  பயந்து  பயந்தே  பயணிக்க  வேண்டிய நிலையில்,தூக்கத்தை மறந்து  பயணிக்கும் நிலையில் பயணிகள்  உள்ளனர். 

இது ஒருபுறம்  இருக்க இந்த பேருந்துகள்  அதிகாலை  5:30மணி  மற்றும் 6 மணிக்கு  பெங்களூரை சென்றடைந்தவுடன்  மீண்டும் ஒரு மணிநேரத்தில் உதகைக்கு பயணப்படுகிறது.  இந்த ப் பேருந்துகளை  இரவு முழுவதும் கண் விழித்து  ஒட்டிக்  கொண்டு  அதே ஓட்டுநரே  மீண்டும் அதே களைப்பில் ஓட்ட வேண்டிய கொடூரமான  நிலையை காணமுடிகிறது.


இவர் சற்றே  கண் அயர்ந்து  விட்டால்  ஒரு வினாடி அயர்ந்துவிட்டால்  பயணிகள் கதி அதோகதிதான். 

இதைவிடக்  கொடுமை  பெங்களூரிலிருந்து  உதகைக்கு  இரவு 9.15 மணிக்கும்,10.40 மணிக்கும்  இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அவைகள் ஏ.சி.பேருந்துகள்.பாடாவதியான  பேருந்துகள் இவைகள் சமவெளிப்பகுதிகளில்  இயக்கப்பட்டு,அந்த  பேருந்துகள்  நட்டத்தில்  இயங்கியதால்  நீலகிரிக்கு  அனுப்பியிருக்கிறார்கள். இந்த பேருந்துகள் அடிக்கடி பழுதடைந்து விடுவது வாடிக்கையான செயலாகவும் இருக்கிறது.


நேற்றிரவு(5.6.2024) கனமழைக்கு மத்தியில் இயக்கப்பட்ட  பேருந்தில் ஏ.சி.பழுதடைந்து பயணிகள்  பட்டப்பாடு சொல்லிமாளாது. ஓட்டுநரும்,நடத்துநரும் பல முறை  போராடியும் இந்த ஏ.சி.பழுதை  சரிசெய்ய  முடியவில்லை. முழுவதும்  அடைக்கப்பட்டுள்ள  கூடு போன்ற இந்தப்  பேருந்தில் மூச்சுவிட கூட முடியாமல், பேருந்தின் மேற்பகுதியில் அவசரகால  வென்டிலேட்டர்களை  திறந்து வைத்துவிட்டு ஓட்ட  வேண்டிய நிலையும்,கூடலூருக்கும்,உதகைக்கும்  நடுவில் கடும் குளிரிலும்  பயணிக்க  வேண்டிய  நிலை  ஏற்பட்டது. 


இந்தப்பேருந்துகளில்  கட்டணமும் அதிகமாகும். கிட்டத்தட்ட 200 ரூபாய்  அதிகமாகும்.

இரவு முழுவதும் பயணிகள் கடும் விவாதத்திலும் ஓட்டுநர்  மற்றும் நடத்துநரிடம்  ஈடுபட்டனர்.

இந்த பேருந்துகளை  இயக்க கூடாது என்று பலமுறை அரசு போக்குவரத்து கழக  பொது மேலாளரை அவர்தம் அலை பேசிக்கு பலமுறை தொடர்பு கொண்டு தெரிவித்தும் எவ்வித பலனும் இல்லை.பயணிகளின்  பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதமும்  இல்லை.


கோத்தகிரி லிருந்து தமிழக குரல் செய்திகளுக்காக C. விஷ்ணு

No comments:

Post a Comment

Post Top Ad