குன்னூர் தேயிலை தூள் ஏலத்தில் விலை உயர்வு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 2 June 2024

குன்னூர் தேயிலை தூள் ஏலத்தில் விலை உயர்வு.



குன்னூர்  தேயிலை தூள் ஏலத்தில் விலை உயர்வு.


நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த தேயிலைத்தூள் ஏலத்தில்  சென்ற ஏலத்தை விட கிலோ ரூபாய் 15  உயர்ந்து விற்பனை ஆனது.


தனியார் தேயிலை தொழிற்சாலைகள் இந்த வாரம் பச்சைதேயிலைக்கு தரத்திற்கு ஏற்ப A,A+,B,B+,B- ,என இரத்த பிரிவு போல் பிரித்து ரூபாய் 18முதல் 22 வரை வழங்குகின்றன.



இந்த வாரம் 18.50 ஆகவும்  பெட்டட்டியில் ஒரு பேக்டரி அதிகபட்ச விலையாக ரூபாய் 24 வழங்கியது. அரவேனு பகுதியில் ஒரு பேக்டரி அதிகபட்ச விலையாக ரூபாய் 23 வழங்கியது.குன்னூரில்  ஒரு பேக்டரி மாத விலையாக (ஏப்ரல் மாதம் என) கணக்கிட்டு  ரூபாய் 24 முதல் 42 வரை வழங்கியதாக ஒரு விவசாயி தெரிவித்தார்.


இந்த வாரம் தேயிலைத்தூள் விலை ரூபாய் 15 உயர்ந்து விற்பனை ஆன நிலையில் பச்சைதேயிலைக்கு கிலோ ரூபாய் 3 முதல்  4 ரூபாய் வரை உயர்த்தி வழங்கியிருக்கலாம் என சில விவரம் தெரிந்த நீலகிரி விவசாயிகள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.


இரத்தப் பிரிவில்  அனைவருக்கும் சேரும் O பிரிவு  போல ஒரே பிரிவாக வைத்து பச்சை தேயிலைக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்பது தேயிலை விவசாயிகளின்  நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad