சிம்ஸ் பூங்காவில் மரங்களில் QR கோடு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 24 May 2024

சிம்ஸ் பூங்காவில் மரங்களில் QR கோடு




   நீலகிரி மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிம்ஸ் பூங்காவில்  64 வது பழக்காட்சி நடைபெறுகிறது.


மூன்று நாட்கள் நடைபெறும் பழக்காட்சியில் 5 டன்கள் பழங்களை கொண்டு வன விலங்குகளின்  உருவ அலங்காரங்கள் செய்யப்பட்டது உள்ளூர் மக்கள் மற்றும்  சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்தது.


150 ஆண்டுகள் பழமையான பூங்காவில் ஏராளமான மரவகைகள் உள்ளது. தற்போது நடைபெறும் பழக்காடசியில் சிம்ஸ் பூங்காவில் உள்ள மரங்களுக்கு அது எந்த வகையைசேர்ந்தது அதன் விவரங்களை அறிய தோட்டகலைத்துறையால் கியூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து விவரங்களை அறியும் வகையில் அந்தந்த மரங்களில் வைத்துள்ளது அனைவராலும் பாராட்டுதல் பெற்றது.


பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad