கண்களுக்கு விருந்து... செவிக்கு இதம்.. புன்னகைக்கும் பஞ்சமில்லை!! - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 30 May 2024

கண்களுக்கு விருந்து... செவிக்கு இதம்.. புன்னகைக்கும் பஞ்சமில்லை!!




JCI குன்னூர் ஹில்ஸ் ஸ்பார்ஸ் அமைப்பின் சார்பில் நீலகிரி மாவட்ட அளவிலான பட்டிமன்றம், நீலகிரி மாவட்டம், குன்னூர்,மே -28. அன்று மூன்று தலைப்பின் கீழ் பேரக்ஸ் பகுதியில் உள்ள டான் பாஸ்கோ ரெட்ரீட் அரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. 


 இப்பட்டிமன்றத்தில் முதலில் களம் இறங்கிய இரு அணியில் 10 நபர்கள் பங்குபெற்று “நெகிழி Plastic வரமா சாபமா? என்ற தலைப்பில் மிக சிறப்பாக விவாதித்தனர். 



நெகிழியின் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் என்று JAC  செந்தில்குமார் தலை மையிலான சாபமே அணியில், 43ஹேண்ட்ண்டிமேன்ஸ் இணை இயக்குனர் JAC ஸ்ரீகாந்த் முத்துகிருஷ்ணன், அன்பு ஆத்மா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் JAC சுரேஷ் மூர்த்தி, JCI கோத்தகிரி நாவா கதைசொல்லி "நிர்மலா மற்றும் JCI கூடலூர் தமிழ்செல்வன். ஒருபுறமும் நெகிழியின் பயன்பாடு இன்றய காலகட்டத்தில ஒரு இன்றி அமையா தேவையாகிவிட்டதால் நெகிழி உபயோகம் அவசியம் தான் ஆனால் நெகிழியை அழிக்க அதை உட்கொள்ளும் நுண்ணுயிரிகளைக் கொண்டு நெகிழியை அழிக்கலாம். நெகிழியை தரம் பிரித்து பயன்பாட்டை குறைக்கலாம் இது போன்ற பல மாற்று வழிகளை கையாலும் பட்சத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம் ஆகையால் நெகிழி வரமே என்று மறுபுறம் அழகாகவும் அறிவுபூர்வமாகவும் விவாதித்த முன்னாள் துணை தலைவர் கண்டோன்மண்ட் JAC வினோத்குமார் தலமையிலான, JAC கோவர்த்தனன் ராமசாமி, உபதலை பஞ்சாயத்து துணைதலைவர் JAC செல்லகுமார் மூர்த்தி மற்றும் JCI கூடலூர் மதிவாணன் அவர்கள் “நெகிழி Plastic வரமே” அணியினர் வெற்றி பெற்றதாக நடுவர்  மற்றும் தேசிய பயிற்சியாளர் JCI SEN கமல் குமார் மற்றும் அவர்கள் மற்றும்  தமிழ் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  நிறுவனர் திரு சுரேஷ் ரமணா அவர்கள் தீர்ப்பு வழங்கினார். 



அதன்பின் நடைபெற்ற இரண்டாம் தலைப்பு பட்டிமன்றத்தில் *சோசியல் மீடியாவா - சொந்த பந்தமா* என்ற களம் இறங்கிய இரு அணியில் 8 நபர்கள் பங்குபெற்று தலைப்பில் மிக சிறப்பாக விவாதித்தனர். சோசியல் மீடியாவே  அணியில் JC யோகானந்த், JC பிரசாந்த் ரவி மற்றும் JC பிரியங்கா பிரசாத் ஒருபுறமும் அழகாகவும் அறிவுபூர்வமாகவும் விவாதித்த அரசு கலை கல்லுரி மாணவன் சுதீர் தலமையிலான, பொறியாளர் JC மதுமிதா, JC விஜயபாரதி மற்றும் மாணவர் JC சச்சின் ஜெபகுமார் “சொந்த பந்தமே” என்ற அணியினர் வெற்றி பெற்றதாக நடுவர்  மற்றும் தேசிய பயிற்சியாளர் JCI SEN கமல் குமார் அவர்கள் மற்றும் தமிழ் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சுரேஷ் ரமணா அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.


அதன்பின் நடைபெற்ற மூண்றாம் தலைப்பு பட்டிமன்றத்தில் *மாடி வீடா - பசுமை காடா* என்று களம் இறங்கிய இரு அணியில் 6 நபர்கள் பங்குபெற்று தலைப்பில் மிக சிறப்பாக விவாதித்தனர்.  அழகாகவும் அறிவுபூர்வமாகவும் இரு அணிகளும் விவாதித்து குறிபாக கட்டிடம் அனுமதிக்கப்பட்ட பகுதியில் திட்டமிட்ட வளர்ச்சி ஏற்புடையது என்று பொறியாளர்கள் JC கலைவாணி, JC டேனியல் கிறிஸ்டோபர் மற்றும் வழக்கறிஞர் JC தினேஷ்குமார் அவர்கள் ஒருபுறமும் நீலகிரியில் உள்ள பெரும் பகுதி உயிர்க்கோள மண்டல வனப்பகுதி என்றும் மறுபுறம் காங்கிரஸ் நகர துணை தலைவர் JC பிரசாத் ராமசாமி தலமையிலான, JC சுகந்த் சுகுமாரன் மற்றும் JC விஷ்வானந்த் “ பசுமை காடு” என்ற அணியினரே வெற்றி பெற்றதாக நடுவர்  மற்றும் தேசிய பயிற்சியாளர் JCI SEN கமல் குமார் அவர்கள் மற்றும் தமிழ் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  திரு.சுரேஷ் ரமணா அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.


இருதியாக நடைபெற்ற JCI மண்டல  XVII அளவிளான தகுதிசுற்று பட்டிமன்றம் மகிழ்ச்சியான வாழ்க்கை *அந்த காலமா - இந்த காலமா* என்ற தலைப்பில் நடைபெற்றது.


அந்த காலமே என்று ஒருபுறம் காங்கிரஸ் நகர துனை தலைவர் JC பிரசாத் ராமசாமி, JCI கோத்தகிரி நாவா கதைசொல்லி நிர்மலா மற்றும் JCI கூடலூர் மதிவாணன் அவர்களும் உணவு உடை இருப்பிடம் போன்றவற்றில் பெரும் மாற்றங்கள் வந்துவிட்டாலும் கூட குறைந்த வேலை சுமை வாழ்வாதாரம் அடிப்படை வசதிகள் போன்றவற்றில் இக்கால மக்களே மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதால், இந்த காலமே என்று மறுபுறம் JCI குன்னூர் ஹில்ஸ் ஸ்பார்க் பட்டயத் தலைவர் விஜயகாந்த் முத்துகிருஷ்ணன்,  முன்னாள் துணை தலைவர் கண்டோன்மண்ட் JAC வினோத்குமார்  மற்றும் JCI கூடலூர் தமிழ்செல்வன் அழகாகவும் அறிவுபூர்வமாகவும் விவாதித்து இந்த காலமே அணியினர் வெற்றி பெற்றதாகவும் நடுவர் தேசிய பயிற்சியாளர் JCI SEN கமல் குமார் அவர்கள் சரியான தீர்ப்புயை மிக நேர்தியாக வழங்கினார்.


நடைபெற்ற மண்டல அளவிலான பட்டிமன்றங்களுக்கு நீலகிரி பகுதி ஒருங்கிணைப்பாளர் JC SEN Er. பிரசாந்த் தலைமை வகித்தார், சிறப்பு விருந்தினர் JCI இந்தியா ஆசிரியர் மற்றும் ஐகானிக் பயிற்சியாளர் JCI SEN A பாபு அவர்கள், நடுவர் தேசிய பயிற்சியாளர் JCI SEN கமல் குமார் அவர்கள், மண்டல இயக்குனர் சமூக மேம்பாடு JFS R கவுசிக், மண்டல இயக்குனர் PR & Marketing JC அன்சாத்,  சிறப்பு விருந்தினராக JC மண்டல இயக்குநர் ஜே.சி.அருசுல்லா அவர்கள்,  மண்டல ஊடக ஒருங்கிணைப்பாளர் JC.பூபதி அவர்கள் மற்றும் பட்டய செயலாளர் JC கலைவாணி விஜயகாந்த அவர்கள் தலைமை வகித்தனர். மாவட்ட அளவிலான பட்டிமன்றங்களுக்கு சிறப்பு விருந்தினர் JCI HGF M ஆல்வாஸ் அவர்கள் மற்றும் நடுவர்  தமிழகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  திரு.சுரேஷ் ரமணா அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் பாராட்டுகளும் பரிசுகளை வழங்கினார்.


சிலம்ப ஒலிக்க, மணிமேகலை குலுங்க குலுங்க, குண்டலம் ஆட, வளையல்  வளையோசை சிதறச் சிதற கைத்தட்டல்கள் , நடுவரின் சிந்தாமணி சிந்தனைச் சிதற சிதறி இப்ப பட்டிமன்றங்களின் ஒட்டுமொத்த நிகழ்வும் திருவிளையாடலில் வரும் செண்பகப் பாண்டியனின் அரசாயையும், தரணியையும், நக்கீரனையும், செண்பகப் பாண்டியனையும், இறைவனாரையும், கண்முன்னே கொண்டு வந்தது ,என்றாலும் மிகையாகாது.


இவ்வாறான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மக்களும் மிகுந்த  மகிழ்ச்சியுடன்  JCI குன்னூர் ஹில்ஸ் ஸ்பார்க்ஸின் முன்முயற்சிகள் நீலகிரி மாவட்டத்தின் பெருமையை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையை தருகிறது என்று நன்றியையும் தெரிவித்தனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad