கோத்தகிரி கிருஷ்ணாபுதூரில் உள்ள பட்டத்துளசியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் கரகம், பால் குடங்களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 22 May 2024

கோத்தகிரி கிருஷ்ணாபுதூரில் உள்ள பட்டத்துளசியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் கரகம், பால் குடங்களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.



கோத்தகிரி கிருஷ்ணாபுதூரில் உள்ள பட்டத்துளசியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் கரகம், பால் குடங்களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இதில் கோவில் பூசாரி உயிருள்ள கோழியின் இரத்தத்தை குடித்து, பக்தர்களுக்கு குறி சொல்லியது காண்போரை மெய் சிலிர்க்க செய்தது.


கோத்தகிரியிலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் கிருஷ்ணாபுதூர் கிராமத்தில் உள்ள பட்டத்துளசியம்மன் கோவிலின் 34 வது ஆண்டு வருடாந்திர திருவிழா கடந்த 13 ம் தேதி இரவு 10 மணிக்கு பூவரம் வேண்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 15 ஆம் தேதி கோவில் கொடியேற்றமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்னி மாரியம்மன் கோவிலில் இருந்து சக்திவேல் எடுத்து கிராமம் முழுவதும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திங்கட்கிழமை காலை மதுரை வீரன் மற்றும் முனீஸ்வரர் பூஜை நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து இன்று காலை பாண்டியன் பூங்கா பால் குளிரூட்டும் நிலைய ஆற்றங்கரையில் இருந்து அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கரகம் மற்றும் பால்குடங்களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.


அப்போது கோவில் பூசாரி ஒருவர் உயிருடன் உள்ள கோழியின் கழுத்தைக் கடித்து அதன் ரத்தத்தைக் குடித்து கறியைத் தின்றவாறு, குறி சொல்லி வந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. ஊர்வலம் கோவிலை அடைந்தவுடன் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 1 மணிக்கு உச்சி பூஜையும், மாலை 3 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது.


நாளை(வியாழக்கிழமை) அபிஷேக அலங்கார பூஜை, மஞ்சள் நீராடுதல், உற்சவ மூர்த்தி சிலை எடுத்து ஊருக்குள் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4.30 மணி முதல் அம்மனை கரை சேர்த்து ஆற்றங்கரையில் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


வருகிற 29 ம் தேதி மறு பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஆறுமுகம், ஊர்த் தலைவர் சந்திரன் ஆகியோர் தலைமையில் கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்   


தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணு மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad