பந்தலூர் அருகே உப்பட்டி மகளிர் தையல் பயிற்சி மையத்தில் மகளிர்களுக்கு தரமான பொருட்கள் கண்டறிந்து வாங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 4 May 2024

பந்தலூர் அருகே உப்பட்டி மகளிர் தையல் பயிற்சி மையத்தில் மகளிர்களுக்கு தரமான பொருட்கள் கண்டறிந்து வாங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 


பந்தலூர் அருகே உப்பட்டி மகளிர் தையல் பயிற்சி மையத்தில் மகளிர்களுக்கு தரமான பொருட்கள்  கண்டறிந்து வாங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், இந்திய நுகர்வோர் சம்மேளனம் (சிசிஐ), ஆல் த சில்ரன் ஆகியன சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மகளிர் தையல் பயிற்சி ஆசிரியர் சுலோச்சனா தலைமை தாங்கினார். 


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் மற்றும் இந்திய நுகர்வோர் சம்மேளன நிர்வாகி சிவசுப்பிரமணியம் பேசும்போது அட்சய திருதியை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் நகைக்கடைகள் நகை வாங்குவதற்காக விளம்பரங்கள் செய்து வருகின்றன. 


தங்கம் வாங்குவதனால் செல்வம் பெருகும் என விளம்பரம் மூலம் கூறப்பட்டு வருகிறது இது உண்மையல்ல என்பது அனைவரும் உணர்ந்த ஒன்றே. தங்கம் வெள்ளி உள்ளிட்டவை வாங்கும் பொழுது இந்திய தர கட்டுப்பாட்டு அமைவனம் மூலம் அளிக்கப்பட்டுள்ள ஹெச் யூ ஐ டி, ஹால்மார்க் முத்திரை பார்த்து வாங்க வேண்டும். தங்கத்தின் தர முத்திரை, அதனுடைய தர அளவீடு மற்றும் அதற்காக கொடுக்கப்பட்டுள்ள  ஆறு இலக்க பதிவு எண்கள் ஆகியவற்றை சரிபார்த்து தங்கத்தை வாங்க வேண்டும்.


தங்கத்தின் விலை 22 கேரட் அளவிற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதால் 16 கேரட் 14 கேரட் நகைகளுக்கு விலை குறைவாகவே இருக்கும். கே டி எம் எனும் நகையில் பயன்படுத்தப்படும் காட்மியம் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மையுடையதால் கேடிஎம் நகைகளை தவிர்க்க வேண்டும். பி ஐ எஸ் கேர்  மொபைல் ஆப் மூலம் பொருட்களில் குறிப்பிட பட்டுள்ள தர முத்திரை குறித்த உண்மை தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.  மின்சார பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்துக்கும் தர முத்திரைகளை பார்த்து வாங்க வேண்டும் என்றார். 


ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது தரமான பொருட்கள் வாங்கும்போது நமக்கு இழப்பு ஏற்படாது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பொருட்களை தேவை அறிந்து வாங்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் விலை குறைவு என்பதால் அதிக பொருட்களை வாங்கி குவிக்க கூடாது. வீணான செலவினங்களை குறைப்பதனால் பொருளாதாரத்தில் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றார்


நிகழ்ச்சியில் தையல் பயிற்சி மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad