கன்னேரிமுக்கு பால்வாடிக்குள் கரடி புகுந்தது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 31 May 2024

கன்னேரிமுக்கு பால்வாடிக்குள் கரடி புகுந்தது.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்க்கு உட்பட்ட கன்னேரிமுக்கில் சிறு குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.



இங்கு குழந்தைகளுக்காக சமையல் அறையுடன் கூடிய விளையாட்டு பொருட்கள் மற்றும் குழந்தைகள் உறங்க மெத்தை மற்றும் போர்வையுடன் கூடிய வகுப்பறை செயல்படுகிறது.


இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கன்வாடியில் புகுந்த கரடி சமையல் எண்ணை உட்பட ஏராளமான பொருட்களை சேதப்படுத்தியது. 

அங்கன்வாடி ஊழியர்  பொதுமக்கள் உதவியுடன் மிகவும் சிரமப்பட்டு சீரமைத்தார்.

நேற்றிரவு மீண்டும் புகுந்த கரடி மாவு மூட்டை உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியது பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோரிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது.

ஆகவே அடிக்கடி  ஊருக்குள் வரும் கரடியை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad