கொளப்பள்ளி அருகே 30 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் விழுந்த குட்டியானை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 29 May 2024

கொளப்பள்ளி அருகே 30 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் விழுந்த குட்டியானை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது




நீலகிரி மாவட்டம் பந்தலூர் கொளப்பள்ளி அருகே 30 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் விழுந்த குட்டியானை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த தாய் யானைவுடன் குட்டியை வனத்துறையினர் பத்திரமாக சேர்த்தனர், தாய் யானைவுடன் குட்டி யானை சேர்ந்ததை வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் உறுதி செய்தனர்...



நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று இரவு கிராம பகுதியில் உலாவந்த யானை கூட்டத்தில் இருந்த குட்டி யானை தேயிலைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 30 அடி ஆழம் கொண்ட திறந்தவெளி கிணற்றுக்குள் விழுந்துள்ளது.



இதனால் குட்டி யானையை பிரிந்த தாய் யானை மற்றும் அதனுடன் இருந்த மற்ற காட்டு யானைகள் பிழியதால் இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தாய் யானைகளை வனப் பகுதிகளுக்குள் விரட்டி தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


பின்னர் வனத்துறை உயர் அதிகாரிகள் அளித்த அறிவுறுத்தலின்படி இரண்டு ஜேசிபி உதவியுடன் கிணற்றின் அருகே பள்ளம் தோண்டப்பட்டு 4 மணி நேரத்திற்கு மேலாக போராடி குட்டி யானையை கயிற்றின் மூலம் கட்டி  பத்திரமாக மீட்கப்பட்டு வெளியே கொண்டுவரப்பட்டது.


இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் மூலம் மீட்பு பணிக்காக குட்டி யானைக்கு கட்டப்பட்டிருந்த கயிற்றை  விடுவித்து தாயானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தாயை பிரிந்த குட்டி யானை தேயிலைத் தோட்டத்தில் அங்கும், இங்குமாக ஓடி தாயை தேடியும் வனத்துறையினரை துரத்தியும், வனத்துறை வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியது.


இந்த நிலையில் குட்டியை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் ட்ரோன் கேமராக்கள் மூலம் தேயிலை தோட்டத்தை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் தாய் யானையே தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப் பகுதியில் தாய் யானை முகாமிட்டிருப்பதை அறிந்த வனத்துறையினர் குட்டியை தாயுடன் சேர்த்தும் அவற்றை டோன் கேமரா மூலம் உறுதி செய்தனர்.



தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad