பீன்ஸ் ரூ 180 - 250 கவலையில் விவசாயிகள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 21 May 2024

பீன்ஸ் ரூ 180 - 250 கவலையில் விவசாயிகள்.




நீலகிரி மாவட்டத்தில் கோடைமழையின் தாக்கம் மற்றும் மிக கனமழையால் காய்கறி விவசாயம்  பாதிப்படைந்தது.


வறட்சியில் நீர்பிடிப்பு பகுதிகளில் மிகவும் சிரமப்பட்டு மலைப்பயிர்கள் பயிரிட்ட விவசாயிகள் தற்போது பீன்ஸ் அறுவடை செய்கின்றனர்.


பல இடங்களில் இன்னும் பீன்ஸ் பூப்பூக்கும் நிலையிலேயே உள்ளது. அறுவடை குறைந்த நிலையில் மேட்டுப்பாளையம் காய்கறிகள் கமிஷன் மண்டியில் நடந்த ஏலத்தில் பீன்ஸ் கிலோ ரூபாய் 180 முதல் 250 வரை விற்பனையானது.

இந்த விலையானது விவசாயிகளை சற்றே மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

ஆனாலும் அறுவடைக்கு ஓரிரு வாரங்களே உள்ள தமது பயிர்களை காத்து அசல் பெற முடியுமா என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad