ஜூன் 10 தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் . - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 31 May 2024

ஜூன் 10 தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் .



தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஜூன் 10 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறந்து வகுப்புகள் நடைபெறும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


இந்த ஆண்டு கோடை வெப்பம் கடுமையாக இருந்ததினால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் நிலை இருந்தது.

தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்து வெப்பம் தணிந்த நிலையில் ஏற்கனவே முன்னேற்பாடாக அனைத்து பள்ளிகளுக்கும் மே31 ம் தேதிக்குள் பாட புத்தகங்கள் சென்று சேரவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


பள்ளி வாகனங்கள் மாவட்ட போக்குவரத்து அலுவலர்களால் சோதனை நடைபெற்றுக்கொண்டுள்ள நிலையில் ஜூன் 6 ஆம் தேதி 1முதல் 12 ஆம் வகுப்பு வரைக்குமான(2024-2025 ஆம் கல்வியாண்டு) பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மீண்டும் பள்ளிகள் ஜூன் 10 ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


ஜூன் 4 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்டஇணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad