அருள்மிகு ஸ்ரீ பால நாக முத்து மாரியம்மன் திருக்கோவிலில் திருத்தேர் திருவிழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 23 April 2024

அருள்மிகு ஸ்ரீ பால நாக முத்து மாரியம்மன் திருக்கோவிலில் திருத்தேர் திருவிழா

 



நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பால நாக முத்து மாரியம்மன் திருக்கோவிலில் திருத்தேர் திருவிழாவானது வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.

           


இதில் ஒரு பகுதியாக நேற்றைய தினம் கோத்தகண்டிமட்டம் ஸ்ரீ மகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இருந்து பூங் கரகம் பறவை காவடி திருத்தேர் பவனி அக்னி சட்டி பால்குடம் மற்றும் மேள தாளங்களுடன் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மனின் ஊர்வலத்தை சிறப்பித்து தந்தனர் மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும்  அம்மனின் அருள்பிரசாதமான அன்னதானம் வழங்கப்பட்டது.குறிப்பாக கடந்த 19ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த விழாவானது ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.



      இந்த ஐந்து நாட்களில் நேற்றைய தினம் இரண்டாம் தினம் இந்த இரண்டு தினங்களும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் ஆசியும் அருள்பிரசாதமான அன்னதானமும் பெற்று சென்றனர் இன்றைய தினத்தில் அம்மனின் ஆலயத்தில் கலை நிகழ்ச்சிகளும் வீர விளையாட்டுகளும் நடைபெற உள்ளது அதனைத் தொடர்ந்து இன்றும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

        தமிழக குரல் இணையதளl செய்திகளுக்காக மஞ்சூர் செய்தியாளர் கோபால் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad