நீலகிரி மாவட்டம் உதகையில் வேட்புமனு தாக்கலின் போது போலீசார் தடியடி நடத்தினர்
நீலகிரி மாவட்டம் உதகையில் பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் ஆன மாவட்ட ஆட்சியர் அவர்கள் அலுவலகம் முன் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளரும் அஇஅதிமுக வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்ய ஒரே நேரத்தில் தங்களது ஆதரவாளர்கள் புடைசூழ கலெக்டர் அலுவலகம் வந்தனர்
அதிரடியான கோஷங்கள் எழுப்பிய நிலையில் இருகட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அது தகராராக போக இருந்த நிலையில் நீலகிரி மாவட்ட காவல்துறையினர் நிர்ணயிக்கப்பட்ட இடத்தை தாண்டி ஆதரவாளர்கள் வந்ததாக கூறி தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்து வெளியை வந்த பாஜாக வின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளர் எல்.முருகன் ஆகியோர் தடியடியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்
அஇஅதிமுகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர் மாவட்ட கண்காணிபாளர் அவர்கள் நேரடியாக இருதரப்பினரையும் சமாதானம் செய்து சாலைமறியலை கைவிட வைத்தார்
இந்த நிலையில் பாஜாக சார்பில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தடியடிக்கு பொறுப்பேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment