பந்தலூர் அருகே சின்கோனா பகுதியில் காசநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 12 December 2023

பந்தலூர் அருகே சின்கோனா பகுதியில் காசநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.


பந்தலூர் அருகே சின்கோனா பகுதியில் காசநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.



காசநோய் ஒழிப்பு திட்டம், பந்தலூர் அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் த சில்ரன் ஓயிட் ஆரோ டிரஸ்ட்  ஆகியன சார்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு சேரன்கோடு டான்டீ சரக நடத்துனர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், காசநோய் பிரிவு உதவியாளர் ரூபி ஆகியோர் முன்னிலை வகித்தனர் 



பந்தலூர் காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார் பேசுகையில் காசநோய் என்பது காற்றில் பரவும் தொற்று நோய், டிரிபோ குலோசிஸ் எனும் கிருமி நுரையீரலில் சேர்ந்து காசநோய் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனை எஸ்ரே மூலம் சளிகட்டு உள்ளதை கண்டறிந்து சளி மாதிரி எடுத்து நவீன கருவிகள் மூலம் பரிசோதனை செய்து கண்டறியபடும். இதன்மூலம் காசநோய் கண்டறிந்தால் அரசு மூலம் இலவசமாக தொடர் சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

 


கூடலூர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் காசநோய் முடி மற்றும் நகம் ஆகியன தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் காசநோய் பாதிப்புகள்  ஏற்படும். இது உடலில் ஊட்டசத்து குறைபாடு காரணமாக வேகமாக பரவும், எனவே ஊட்டசத்து உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும். ரேசன் கடைகளில் ஊட்டசத்து குறைபாடு போக்க ஊட்டசத்து சேர்க்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது இதனை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் ஆரோக்கியமான உணவுகள், கீரைகள் பழங்கள் போன்றவை உணவில் எடுத்து கொள்ள வேண்டும் என்றார்.



தொடர்ந்து 50க்கும் மேற்பட்டோருக்கு காசநோய் கண்டறியும் பரிசோதனை சளி மாதிரி சேகரிப்பு எடுக்கப்பட்டது.



இதுபோல் பாட்டவயல் பகுதியில் காசநோய் கண்டறிதல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.



நெலாகோட்டை காசநோய் பிரிவு, ஆல் தி சில்ரன், ஒயிட் ஆரா அறக்கட்டளை சார்பில்  நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தாங்கினார், காசநோய் தடுப்பு பிரிவு மேற்பார்வையாளர் மோனிஷா முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் காசநோய் மூலம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து எடுத்து கூறினார். அதனை தொடர்ந்து காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.இறுதியாக நுகர்வோர் பாதுகாப்புமையத் துனை தலைவர் ராஜா நன்றி கூறினார்...

No comments:

Post a Comment

Post Top Ad