நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆட்டோ ஓட்டுனரை வெட்டி கொலை செய்த இருவர் கைது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 November 2023

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆட்டோ ஓட்டுனரை வெட்டி கொலை செய்த இருவர் கைது


 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள திம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கோதண்டன் ஆவார் இவருக்கு ராதா என்ற மனைவியும் மனோஜ் தீபக் ஆகிய மகன்களும் உள்ளனர்.


கோதண்டன் ராதா தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதால் ஒவ்வொரு முறையும் ராதாவின் அக்கா ராஜம்மாள் மற்றும் அவரது மகன்களான ஜஸ்வந்த் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கோகுல் ஆகியோர் அடிக்கடி சமாதானம் பேசி வைப்பது தொடர்கதையாகி உள்ளது


சென்ற வாரம் மனைவி ராதாவை அதிக டார்ச்சர் செய்த நிலையில் கைகலப்பு வரை சென்று ஜஸ்வந்த் கோகுல் ஆகியோர் மிகவும் சிரமப்பட்டு தம்பதியரை சமரசம் செய்துவைத்ததாக கூறப்படுகிறது



இந்த நிலையில் இன்றும் ராதாவை கோதண்டன் அதிக டார்ச்சர் செய்ததாகவும் அதிகமாக அடித்து  உதைத்ததாகவும் ராதா தனது அக்கா மகன்களுக்கு தொலைபேசியில் கூறியதால் விரத்தியடைந்து கோபத்தின் உச்சிக்கு சென்ற ஜஸ்வந்த் கோகுல் இருவரும் சுண்டட்டி கிராமத்திலிருந்து காரில் வந்துள்ளனர் கடக்கோடு தனியார் பள்ளி அருகே வந்தபோது எதிரே வந்த கோதண்டன் மீது வாகனத்தை மோத செய்யும் போது அவர் விலகிச்செல்ல நிலை தடுமாறிய வாகனம் சாலையில் கவிழ்ந்த நிலையில் காரிலிருந்து வெளியே வந்த ஜஸ்வந்த் கோகுல் ஆகியோர் கோதண்டனை சரமாரியாக தாக்கி கத்தியால் கழுத்தை வெட்டியதில் ஆட்டோ ஓட்டுனர் கோதண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்



தகவலறிந்த கோத்தகிரி காவல் ஆய்வாளர் வேல்முருகன் அவர்களும் உதவி ஆய்வாளர்கள் யாதவ கிருஷ்ணன், ரமேஷ் ,ரகுமான்கான் ஆகியோர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் ஜஸ்வந்த் கோகுல் ஆகிய இருவரையும் கைது செய்து  அழைத்து சென்றதுடன் மேலும் விசாரணை  நடத்துகின்றனர். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad