பந்தலூர் பகுதி பொதுமக்களின் போராட்டத்தின் எதிரொலியாக இரும்புபாலம் பகுதிக்கு கும்கி யானைகள் வரவழைப்பு.... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 October 2023

பந்தலூர் பகுதி பொதுமக்களின் போராட்டத்தின் எதிரொலியாக இரும்புபாலம் பகுதிக்கு கும்கி யானைகள் வரவழைப்பு....


பந்தலூர் பகுதி பொதுமக்களின் போராட்டத்தின் எதிரொலியாக இரும்புபாலம் பகுதிக்கு கும்கி யானைகள் வரவழைப்பு....


  நீலகிரி மாவட்டம் 65சதவீத வனப்பகுதியாக உள்ளதால் காட்டு யானைகள், புலி, சிறுத்தை கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. இதிலும் குறிப்பாக கூடலூர் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் மிக அதிகமாகவே காணப்படுகிறது.  இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் பகல் நேரங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் முகாமிட்டு வருவதால் அவ்வப்போது மனித வனவிலங்கு மோதலும் தவிர்க்க முடியாத ஒன்றாகி உள்ளது.


 இந்நிலையில். நேற்றைய தினம் பந்தலூரை  அடுத்துள்ள இரும்புபாலம் பகுதியில் கட்டகொம்பன் புல்லட்ராஜா இரண்டு காட்டு யானைகள் புகுந்தது. தொடர்ந்து வனத்திற்குள் செல்ல வழி தெரியாமல் அங்கும் இங்குமாக ஓடியது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்களையும் விரட்டியது. இவ்வாறு  தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் யானைகள் குடியிருப்புக்குள் வருவதை தடுக்க வேண்டும், மேலும் அந்த 2 காட்டு யானைகளை பிடிக்க வேண்டும் என பந்தலூர் பஜார் பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 இதனால்  தொடர்ந்துஇன்று முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பொம்மன், சீனிவாசன் ஆகிய இரண்டு யானைகள் வரவழைக்கபட்டுள்ளது.   பிதீர்காடு ரேஞ்சர் ரவி ,பந்தலூர் ரேஞ்சர் சஞ்சீவி, ஓவேலி ரேஞ்சர் சுரேஷ், கூடலூர் ராதாகிருஷ்ணன், ஸ்கோடு ரேஞ்சர் எலியாஸ்வீரன்  .என ஒன்றினைந்து பொம்மன் சீனிவாசன் என்ற கும்கி யானைகளை ஊருக்குள் கொண்டு வந்தனர்...  தொடர்ந்து கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் இரவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நாளை காட்டு யானைகளை விரட்டும் பணி துவங்கும் என வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad