பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் போதை பொருள் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 October 2023

பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் போதை பொருள் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் போதை பொருள் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், ஏகம் பவுண்டேஷன் பள்ளி நிர்வாகம் ஆகியன இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.



மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசும்போது போதை பொருட்கள் பயன்பாட்டினால் இளம் சமூகம் விரைவில் அடிமையாகி வாழ்வை இழந்து வருகின்றனர்.  பல்வேறு வகையான போதை பழக்கங்கள் பரவி வருகின்றது. போதை பழக்கங்கள் மூலம் கல்லீரல், சிறுநீரகம், வயிறு உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு வருகிறது. சில போதை பொருட்களை முகர்ந்து கொள்வதால் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. புகை வடிவில் எடுத்து கொண்டால் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும்.



தொடர்ந்து பயன்படுத்தும் சூழலில் இரத்ததில் போதையின் தாக்கம் ஏற்ப்பட்டு புற்றுநோய் உள்ளிட்ட பெரும் பாதிப்புகள் ஏற்படுவதுடன் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மாணவர்களின் வளர்ச்சி பருவத்தில் ஏற்படும் போதை பழக்கத்தால் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி பாதிக்கபடும். கல்வியில் அக்கறை செலுத்த இயலாது எனவே வளரும் பருவத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என்றார்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போதுமாணவ பருவத்தில் எளிதில் கெட்ட பழக்கங்கள் தொற்றி கொள்ளும், இதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்களுடைய ஏற்படும் போதை பழக்கத்தில் மூலம் படிக்க இயலாமல், வாழ்க்கையின் உயர முடியாமல்  அவதிகுள்ளாவர்கள். போதை பொருள் வாங்க பணம் இன்றி திருட்டு போன்ற வழிதவறி குற்றவாளியாக மாறும் சூழலும் ஏற்படும். போதையில் நிலைதடுமாறி செல்வதால் சமூகத்தில் மதிப்பை இழக்கும் அவலமும் ஏற்படும். மாணவ பருவத்தில் வாழ்க்கையில் உயரும் வகையில் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றார்.



ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், ஆல்கஹால் அனானிமாஸ் அமைப்பு மாதவன் ஆகியோர் போதை பழக்கம் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad