நீலகிரி மாவட்டத்தில் பிரதான விவசாயம் தேயிலை விவசாயம் ஆகும் விவசாயிகளிடம் பெறப்படும் தேயிலைக்கு ஒவ்வொரு தொழிற்சாலையும் ஒவ்வொரு விலை வழங்கி வருகிறது. ஆனால் வெளிச்சந்தையில் விவசாயிகள் பயன்படுத்த வாங்கப்படும் தேயிலைத்தூளின் விலை அதிகமாக உள்ளது எனவே தேயிலை விவசாயிகள் தங்களுக்கு கட்டுப்படியாகும் விலை வழங்க வேண்டி தேயிலை வாரியத்தை நாடியதுடன் பல தரப்பட்ட உண்ணாவிரத போராட்டம் நடத்தியதுடன் கோர்ட்டில் வழக்கும் தொடுத்தனர் இந்த நிலையில் நீதிமன்றம் தேயிலை வாரியம் குறைந்த பட்ச ஆதார விலையை அறிவிக்க உத்தரவிட்ட நிலையில் தேயிலை வாரியம் அக்டோபர் மாதத்திற்கான குறைந்த பட்ச கொள்முதல் விலையாக ஒரு கிலோ தேயிலைக்கு ரூபாய் 15.53 வழங்க வேண்டும் என தேயிலை கொள்முதல் செய்யும் அனைத்து தேயிலை தொழிற்சாலைகளுக்கும் உத்தரவிட்டதுடன் அதற்கும் குறைவாக விலை வழங்கினால் அந்த தேயிலை தொழிற்சாலை மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment