நீலகிரி மாவட்டம் உதகைக்கு அருகே அமைந்துள்ளது எடக்காடு கிராமம் இந்தப் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் இவரது மனைவி கல்யாணி இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் இந்த நிலையில் இவர்களுடைய மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார் இரண்டாவது மகளான விசித்ராவுக்கு 23 வயதாகிறது அவர் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார் இதற்கிடையில் விசித்திராவிற்கு கல்யாண வயது நெருங்கியதால் அவருக்கு திருமண வரன் பார்த்து வந்துள்ளனர் அதன்படி விசித்ராவிற்கு வேறு ஒரு நபருடன் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது அவர்களுடைய குடும்பமே கல்யாண நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் கடந்த 1-ம் தேதியில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.
அன்றைய நாள் வீட்டை விட்டு வெளியே சென்ற விசித்திரா வீடு திரும்பவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர் ஆனால் விசித்ரா எங்கு தேடியும் கிடைக்கவில்லை இதை அடுத்து இளம்பெண் விசித்ரா அவரது வீட்டிற்கு பின்புறமாக உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார் அப்போது தனது மகளை சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து விசித்ராவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர் இதனால் எடக்காடு பகுதி முழுவதும் சோகத்தில் ஆழ்ந்தது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்ட் விஜயலட்சுமி சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் விசித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் முதலில் இந்த வழக்கை சந்தேகத்திற்குரிய வழக்காக பதிவு செய்த போலீசார் விசித்ரா தற்கொலை செய்து கொண்டாரா குடிநீர் தொட்டியில் தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்துவிட்டு அவரை இந்த தொட்டியில் வீசினார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது போலீசார் விசாரணையில் சிவசக்தி நகரை சேர்ந்த ஜெயசீலன் என்ற நபரின் பெயர் அடிபட்டது கூலி வேலை செய்துவரும் ஜெயசீலன் விசித்ராவுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவர் என்பது தெரியவந்தது இதனை அடுத்து ஜெயசீலனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்த சென்று விசாரணை நடத்தினர் போலீசாரின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத ஜெயசீலன் பல்வேறு உண்மைகளை கூறியுள்ளார் இதனைக் கேட்ட போலீசார் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தனர்.
விசித்ராவும் ஜெயசீலனும் எடக்காடு பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் அங்கே இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது அன்றைய நாள் முதல் இவர்கள் இருவரும் செல்போனில் மணி கணக்கில் பேசி வந்துள்ளனர் அப்போது நாளுக்கு நாள் இவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறியுள்ளது இந்த நிலையில் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இவர்களது காதலில் காலப்போக்கில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது அதில் ஜெயசீலனுக்கும் விசித்ராவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது இது ஒரு நாள் உச்சத்தை தொட ஜெயசீலனின் நடவடிக்கைகள் விசித்ராவிற்கு பிடிக்காததால் அவருடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார் இதனிடையே விசித்ராவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் நடந்துள்ளது இதை தெரிந்து கொண்ட ஜெயசீலன் அது குறித்து கேட்பதற்கு விசித்ராவை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார் ஆனால் விசித்திராவோ ஜெயசீலனின் அழைப்பை எடுக்காமல் இருந்துள்ளார்.
இதனால் விசித்திரா மீது ஜெயசீலனுக்கு உள்ள கோபம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது இதற்கிடையில் எடக்காடு பகுதிக்கு சென்ற ஜெயசீலன் தனியாக பேச வேண்டும் எனக் கூறி அவரின் வீட்டுக்கு அருகே அளித்துள்ளார் அப்போது தன்னை ஏன் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாய் என்று விசித்திராவிடம் கேள்வி கேட்டுள்ளார் அந்த சமயம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஜெயசீலன் அருகில் இருந்த கயிற்றை எடுத்து விசித்ராவின் கழுத்தை நெரித்து அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார் இவை அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துள்ளது இடைத்தொடர்ந்து விசித்ரா இறந்து விட்டதால் பதற்றம் அடைந்த ஜெயசீலன் அவரது உடலை பக்கத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இவையெல்லாம் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது இதன் பிறகு ஜெயசீலனின் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து ஊட்டி ஜுடிசியல் மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் தற்போது காதலித்த பெண்ணிற்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நீலகிரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment