வீட்டை சூரையாடிய யானை கூட்டம்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 July 2023

வீட்டை சூரையாடிய யானை கூட்டம்...

 


நீலகிரி பந்தலூர் கொளப்பள்ளி அடுத்துள்ள மழவன் சேரம்பாடி பகுதியில்ஒருவரது வீட்டின் கதவை உடைத்து பொருட்களை தூக்கி வீசி அட்டகாசம் இதனால் மக்கள் பபீதி...

பந்தலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட.கொளப்பள்ளி மழவன் சேரம்பாடி பகுதியில் வசித்து வருபவர்  லலிதா தேவி வயது 60.இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார் .இன்னிலையில் நேற்று மாலை ஆறு மணியாளவில் யானை கூட்டம் மழவன் சேரம்பாடி பகுதியில் உலாவந்தது வந்த  யானை கூட்டம்  லலிதாதேவி  வீட்டை முற்றுகையிட்டது பின்பு வீட்டை வட்டமடித்த யானை ஒற்று வீட்டின் கதவை உடைத்தது பின் தும்பிக்கையை  நீட்டி வீட்டின் பொருட்களை அனைத்தும்    தூக்கி வீசியது .

பின்பு கிடைத்த தானியப் பொருட்களை சாப்பிட்டது.


 இன்னிலையில் யானை கண்காணிப்பு பணியாளர்கள் யானையை விரட்டினர் . யானையை பொதுமக்கள் வனத்துறையும் சேர்ந்து  விரட்டினர்  யானைகள் அங்கிருந்து அசைய வில்லை போகாமல் இருந்த தால் மீண்டும் சத்தம் எளிப்பியும் கூச்சளிட்டும் யானையை விரட்டி விட்டனர் .

இன்னிலையில் வேலைக்கு சென்றிருந்த லலிதாதேவி வந்து பார்த்த போது பொருட்கள் தூக்கி வீசியதை கண்டு  அதிர்ச்சியடைந்தார் 


.இதனிடையே சம்பவந்தை அறிந்த வனத்துறையினர் நேரில் சென்று பார்த்து  விட்டு ஆறுதல் கூறினர். இதை போன்று அப்பகுதி  திமுக கவுன்சிலர் கோபால்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்து ஆறுதல் கூறி உதவிகளை செய்து கொடுத்தார்...லலிதா தேவிக்கு சொந்த பந்தம் கிடையாது ஊருகாரர்கள் தான் சொந்தம் என்பது குறிப்பிட தக்கது....


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad