நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த காந்தல் பகுதியில் உள்ள குருசடி ஆலய திறப்புவிழா மற்றும் ஆலய விழா மிகசிறப்பாக நடைபெற்றது. ஆலய திறப்பு விழாவிற்கு இந்திய தூதர் மற்றும் மாவட்ட ஆயர் அமல்ராஜ் மைசூர் ஆயர் மற்றும் மாவட்ட பங்கு தந்தைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த திருவிழாவில் அனைத்து ஊர் பொதுமக்களும், வெளி மாநில பிஷப்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்கள். இந்த திருவிழாவின் போது காலையில் திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது அன்பினையும், வாழ்த்துக்களையும் பரிமாற்றம் செய்து இவ்விழாவினை மேலும் சிறப்பித்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment