மின் கம்பத்தில் தீ பந்தத்தை கட்டி எதிர்ப்பு... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 May 2023

மின் கம்பத்தில் தீ பந்தத்தை கட்டி எதிர்ப்பு...


 பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு  சிங்கோனா குடியிருப்பு பகுதிக்கு வெகுநாட்களாக தெருவிளக்கு போட்டுத்தர பஞ்சாயத்தில் கேட்டும் தெருவிளக்கு அமைத்து தராததால் மக்கள் இன்று மின் கம்பத்தில் தீ பந்தத்தை கட்டி எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்...



சேரங்கோடு அடுத்துள்ள சிங்கோனா குடியிருப்பு பகுதி இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இங்கு உள்ள கிராம பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை தார் சாலை ஓரமாக உள்ள மின் கம்பத்தில் தெரு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது...


 ஆனால் எறிவதில்லை இதன் சம்மந்தமாக சேரங்கோடு பஞ்சாயத்து அலுவலகத்தில் மனு கொடுத்து தெரிவித்தும் இதுவரை தெருவிளக்கு அமைத்து தரபடவில்லை...



 இன்னிலையில் தற்போது படச்சேரி  பகுதியில் எந்தெந்த தெருவிளக்கு இல்லையோ அந்த இடங்களில் தெருவிளக்கு அமைக்கும் பனி துவங்கப்பட்டது.

 

இன்னிலையில் சிங்கோனா பகுதியில் உள்ள தெருவிளக்கு பல நாட்களாக எரியவில்லை  பழது போல தெரு விளக்கை  பஞ்சாயத்து பனியாளரிடம்  பழுது பார்த்து போட்டு தாங்கள் என்று  கேட்டால் விரைவாக சரிசெய்து தருகிறேன்  என்று சொல்லி தட்டி கழித்து வந்தார் மின் பணியாளர்


இதனை தோடர்ந்து அப்பகுதியில் உள்ள பதினைந்தாம் வார்டு உறுப்பினர் மரிக்கொழந்து  நேரடியாக சென்று பஞ்சாயத்து மின் ஊழியரிடம் கேட்ட போது அதற்கு போட்டு தருகிறேன் என்று சொல்லி விட்டு பத்து நாட்கள் ஆகி விட்டது இது வரை தெரு விளக்கு  எரியவில்லை. கோபம் கொண்ட பொது மக்களே மின் கம்பத்தில் பந்தத்தை கட்டி  எதிர்ப்பை தெரிவித்தனர்..


இது இவ்வாறு இருக்கு இந்த சிங்கோனா பகுதிக்கு யானைகள் அதிகளவு உலாவருவதும் வீடுகளை உடைப்பது மக்களை அச்சுருத்துவதும் வழக்கம். இன்னிலையில் நேற்றைய தினம் காட்டு யானைகள்  கூட்டம் உலாவந்தன இவற்றை வனத்துறையினர் விரட்டி விட்டனர் இதே சம்பவம் பலமுறை நடந்துள்ளது .


 குடியிறுப்பு பகுதிக்கு  காட்டு யானைகள் வருவதால் மக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்து வாழும் சூழல் உருவாகியுள்ளது மக்கள் மாலை நேரம் வீட்டை விட்டு வர முடியாது அதனால் தான் தெருவிளக்கு  பழது பார்த்து தெரு விளக்கை அமைத்து தர கேட்டனர் ஆனால் பஞ்சாயத்து ஊழியரோ எதையும் கண்டுக்கொள்ளாமல்  தாமதம் படுத்தி வருவதாக  அப்பகுதி பொது மக்கள் குற்றச்சாட்டு....


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad