தமிழ்நாடு அரசால் நடத்தப்பபட்ட கலைத்திருவிழாவில் மாநில அளவில் ஓவியம் வரைதலில் முதல் இடம் பெற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் மற்றும் மாநில அளவில் கவிதை மாணவி. 3 வது இடம் ஆகியோருக்கு தேவாலா பகுதியில் பள்ளி மணவ மாணவிக்கு மேல தாளத்துடன் ஊர்வலமாக வந்த அசத்திய பொதுமக்கள் . ..
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவாலா பகுதி அரசு பள்ளியிலிருந்து தமிழ்நாடு அரசால் நடத்தப்பபட்ட கலைத்திருவிழாவில் மாநில அளவில் ஓவியம் வரைதலில் முதல் இடம் பெற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஜோ.ஜோமி மற்றும் மாநில அளவில் கவிதை புனைதலில் மூன்றாமிடம் பெற்ற மாணவி. தி.தீப்தி ஆகியோருக்கு பாராட்டு விழா மற்றும் பேரணி பள்ளியிலிருந்து தேவாலா நகர் வரை சிறப்பாக நடைப்பெற்றது. வியாபாரிகள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம்,அப்துல்கலாம் பொது சேவை மையம் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் திரு. .ந.கீர்த்திவாசன், உதவி தலைமையாசிரியர் வே.கிருஷ்ணகுமார் வகுப்பாசிரியர் கவியரசு, திருமதி. சாந்தி ஆசிரியை பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்துக்கொண்டனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment