நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சுப்பிரமணியின் தலைமையில் நடைபெற்றது...
இவ்விழாவில் எமரால்டு காவல் ஆய்வாளர் திரு சசிகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தார் இவ்விழாவில் பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகமும் பொதுமக்களும் இந்த விளையாட்டு விழாவில் கலந்து கொண்டார்கள் விளையாட்டு விழாவில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது...
இந்த விளையாட்டுப் போட்டிகளில் எமரால்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டதோடு விளையாட்டு போட்டிகளை ரசித்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தினார்கள்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...





No comments:
Post a Comment