நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள உப்பட்டி ஏலமன்னா அருகே கிணற்றில் சிறுத்தை விழுந்து உயிரிழப்பு....
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அருகே ஏலமன்னா பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவரது வீட்டின் அருகே ஆழமுள்ள குடிநீர் கிணறு உள்ளது. இன்று காலை கிணற்றினுள் சத்தம் கேட்டது பார்த்தபோது, கிணற்றினுள் சிறுத்தை ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததை பார்த்துள்ளார். உடனே கவுன்சிலர் முரளி பிதர்காடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
வனச்சரகர்கள் அய்யனார், சஞ்சீவி, தலைமையிலான வனக்குழுவினர் ஏணி மூலம் சிறுத்தையை மீட்க முயற்சித்தனர். பயனளிக்காத நிலையில், கூடலூர் தீயணைப்பு நிலைய குழுவினர் மூலம் கிணற்றினுள் இறங்கி பார்த்தபோது சிறுத்தை உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு எறியுட்டப்பட்டது. மேலும் சிறுத்தை கிணற்றில் விழுந்து உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்......
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.S.T மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment