40 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 January 2023

40 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்...

நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக கூடலூர் பகுதியில் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்...




கூடலூர் பந்தலூர் பகுதிகளில் அதிகளவு கஞ்சா ஆன்ஸ்  மான்குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது இதனை காவல்துறையினர் பிடித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிக்கு அறிவுரை வழங்கி வந்தாலும் தொடர்ந்து குற்றங்கள் நடைபெற்ற வண்ணமாக உள்ளது. இன்னிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கூடலூர் பகுதி வழியாக கேரளாவிற்கு போதை வஸ்துகள் கடத்தப்படுவதாக மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் நீலகிரி மாவட்ட காவல் கண்கானிப்பாளர் முனைவர் பிரபாகரன் அவர்களின் உத்தரவின் பேரில் கூடலூர்  காவல் துறை துனை கண்கானிப்பாளர் மகேஸ்குமார் அவர்கள்  மேற்பார்வையில் காவல்துறை துனை ஆய்வாளர்  அருள் அவர்கள் தலைமையிலான தனி படையினர் தொரப்பள்ளி பகுதியில் கண்காணித்து வந்த போது TN 52 C 8904 என்ற பதிவு எண் கொண்ட மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதனுள் தடை செய்யப்பட்ட சுமார்  40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை வஸ்துகள் இருப்பதை தனிப்படையினர் கண்டுபிடித்து இதனை கடத்தி வந்த கேரளா மாநிலம் எடவன்னா பகுதியை சேர்ந்த அனீஸ் கல்லுங்கில் த.பெ.பக்ரூதின் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...   


நீலகி மாவட்டத்தில் முதன் முறையாக 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை வஸ்துகளை பிடித்தது குறிப்பிட தக்கது...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

 

No comments:

Post a Comment

Post Top Ad