நீலகிரி மாவட்டம் முள்ளிக்கொரை பகுதியில் செயல்பட்டு வரும் அப்துல் கலாம் கனவு அறக்கட்டளையின் இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள் இருக்கின்றனர் அவர்களை இந்த கார்த்திகை தீப திருநாளில் உற்சாகப்படுத்தும் நோக்கத்தோடு இன்றைய தினத்தில் நமது இல்லம் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அங்கு இருப்பவர்களுடன் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட்டது.
அறியாமை என்னும் இருளை விலக்கி அன்பு எனும் தீபத்தை நமது அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் நமது அன்பு இதயங்கள் அன்பு என்னும் எண்ணெயால் பாசம் எனும் திரி போட்டு அறம் என்னும் தீபத்தை ஏற்றி மகிழ்ந்தனர்.
இந்த புனிதமான நிகழ்விற்கு உதகை நகர் மன்ற தலைவர் வானீஸ்வரி, மற்றும் முள்ளிக்குறை நகர் மன்ற ஜெயலட்சுமி ஜெயலட்சுமி சுதாகரன் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.


No comments:
Post a Comment