தமிழ்நாடு தேயிலைத் தோட்ட தொழிலாளர் விவகாரம்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன முழக்கப் போராட்டம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 31 December 2022

தமிழ்நாடு தேயிலைத் தோட்ட தொழிலாளர் விவகாரம்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன முழக்கப் போராட்டம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பந்தலூர் வட்ட குழு சார்பில் செயலாளர் பெ.முத்துக்குமார் தலைமையில் கொளப்பள்ளியில் 29.12.2022 வியாழக்கிழமை அன்று மாலை சுமார் 5:30 மணி அளவில் கோரிக்கை அட்டைகள் ஏந்தி கண்டன முழக்கப் போராட்டம் நடைபெற்றது. 



போராட்டத்தில் தமிழ்நாடு போக்குவரத்து கழக ஏஐடியூசி தலைவர் அ.ம. குணசேகரன், ஏஐஒய்எஃப் முன்னாள் மாவட்ட செயலாளர் மு.க முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரிகின்ற தாயகம் திரும்பியோர் குறித்து தவறான தகவல்களை தெரிவித்தும் இழிவுபடுத்தும் விதமாகவும் பேசிய, நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட பொழுது தன்னை தாயகம்  திரும்பியவர் என்று அறிவித்துக் கொண்டு தேர்தல் களம் கண்டு வெற்றி பெற்ற பின்பு தாயகம் திரும்பியோர் குறித்து அக்கறை செலுத்தாத நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசாவை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் தனது பேச்சுக்கு பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.


தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்தில் பணிபுரிகின்ற தொழிலாளர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பணிகளில் இருப்பதாக தெரிவித்த ஆ.இராசாவின் கூற்றுப்படி தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்தில்  எத்தனை பேர் பணி புரிகின்றார்கள் என்கிற விவரத்தை தேயிலைக் கோட்ட வாரியாக வெளியிட வேண்டும். 


அலுவலகப் பணியாளர், ஓட்டுநர், நடத்துநர், வட்டாட்சியர், துணை ஆட்சியர், ஆட்சியர் உள்ளிட்ட பணிகளில் எந்தெந்த துறைகளில் தாயகம் திரும்பிவர்களின் வாரிசுகள் எத்தனை பேர் பணி புரிகின்றார்கள் என்கிற விவரத்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா அவர்கள்  .வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபடி ரூ.14 (13.46)இலட்சத்தில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டப்படுமா அல்லது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா தெரிவித்தபடி ரூ.31/2. இலட்சத்தில் வீடுகள் கட்டப்படுமா என்பது குறித்தும் வீடுகள் எந்தப் பகுதிகளில் கட்டப்படும் அத்தகைய வீடுகளில் குடியேறும் தாயகம் திரும்பியோரின் வாழ்வாதார ஏற்பாடுகள் என்ன என்பது குறித்தும் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும். 


இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி, மறுவாழ்வு திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழக வீடுகளையே ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சொந்தமாக்கி தர வேண்டும். பணி நிறுத்தப்பட்ட 2000 தற்காலிகத் தொழிலாளர்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் அறிவித்தபடி மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பணி வழங்கி நிரந்தரம் செய்ய வேண்டும். 


தொழிலாளர் பற்றாக்குறை நிலவுமானால் நீலகிரி மாவட்டத்தின் கிராமங்களில் வாழும் தாயகம் திரும்பிய குடும்பங்களில் உள்ளவர்களுக்கு பணி வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும். நிரந்தரத் தீர்வாக முதலமைச்சரின் விவசாய தொழிலாளர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் தாயகம் திரும்பிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும். 


தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்களை விட குறைந்த சம்பளத்தை பெற்று பெரும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வரும் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த குறைந்தபட்ச சம்பளமான ரூபாய் 425 .40 பைசாவை நிலுவைத் தொகையோடு கணக்கிட்டு வழங்க வேண்டும். உடனடியாக தமிழ்நாடு தேயிலை தோட்டக்க கழக தொழிலாளர்களின் வாரிசுகளான படித்த, பட்டதாரி இளைஞர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் முதலில் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணிகளை வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும். 


தொழிலாளர்களின் குடியிருப்புகளையும் கழிப்பறைகளையும் பழுது நீக்கி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் சிபிஐ கூடலூர் நகர செயலாளர் பா. இராஜா ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்க க. செல்வராஜ் (கூடலூர்), முருகேசன் (பந்தலூர்) தமிழ்நாடு விவசாய சங்க பந்தலூர் வட்ட செயலாளர் ந.கந்தசாமி, இந்திய தேசிய மாதர் சம்மேளன பொறுப்பாளர்கள் யோகேஸ்வரி, லலிதாதேவி, சீதாலட்சுமி, செல்வமேரி ஏஐடியூசி தோட்டத் தொழிலாளர் சங்க  பரமநாதன், கைலாசநாதன், ஞானசேகர், சிவலிங்கம், சண்முகம், கிருசுணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பந்தலூர் வட்டக்குழு பொருளாளர் ஆ.ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad