சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் ரஜினி ரசிகர்கள் மாலை சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கினர். நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73வது பிறந்தநாளையொட்டி இன்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர் மன்றத்தினர் மற்றும் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.
இதனையொட்டி இன்று உதகையை அடுத்த முள்ளிக்கொரை பகுதியில் இயங்கி வரும் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தில் ஸ்டைல் கிங் சுலைமான் மற்றும் மணி ஆகியோர் இல்லத்தில் உள்ள 90 நபர்களுக்கு மாலை சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.


No comments:
Post a Comment