பந்தலூர், தேவாலா பகுதிகளில் பட்டாசு கடைகளில் கூடலூர் கோட்டாசியர் சரவண கண்ணன் திடீர் ஆய்வு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 10 October 2022

பந்தலூர், தேவாலா பகுதிகளில் பட்டாசு கடைகளில் கூடலூர் கோட்டாசியர் சரவண கண்ணன் திடீர் ஆய்வு.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா பந்தலூர்  பகுதியில் எதிர்வரும் தீபாவளியை ஒட்டி பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவதற்காக கூடலூர்  கோட்டாட்சியர் சரவண கண்ணன்  மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்க் கொண்டனர். 


மேலும் பட்டாசு கடைகள் நடத்த சரியான ஆவனங்கள் உள்ளதா என்று பட்டாசு கடை வியாபாரத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்றும் மேலும் கடை உரிமம் இல்லாதவர்களுக்கு பட்டாசு கடை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது கடை உரிமையாளரிடம் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்  அபாயகரமான பட்டாசுகளை விற்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். 


இன்னிலையில் மேலும் ரேசன் கடைகளில் உனவு பொருட்கள் தரமாக வழங்கப்படுகிறதா உனவு பொருட்கள் இருப்பு உள்ளதா என்றும்  குறித்த நேரத்தில் கடைகள் திறந்து செயல்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார்.


பலசரக்கு கடைகளில் சென்று பிளாஸ்டிக் விற்பனை உள்ளதா என்றும்  தரமான பொருட்கள்  விற்பனை செய்கிறார்களா காலாவதி ஆன  உணவு பொருட்களை விற்பனை செய்கிறார்களா என்றும் ஆய்வு மேற் கொண்டார்.


மேலும் தாபால் நிலையத்திற்கு சென்று ஆங்கு ஆயவு செய்தார் பின்னர் தபால்  நிலையத்தில் பென்சன் பணம் வாங்க வந்த பெண்களிடம் நீங்கள் இங்கு வந்து நிற்க தேவையில்லை பென்சன் பணம் வீடு தேடி வரும் என்று கூறினார். மேலும் பல இடங்ளில்  பல்வேறு கடைகளில்  ஆய்வு மேற் கொண்டார்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு. 

No comments:

Post a Comment

Post Top Ad