தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் நீலகிரி மாவட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் ஊட்டி YMCA அரங்கில் தமிழக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் திரு. பாஷா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது. இன்று நடைப்பெற்ற கூட்டத்தில் உறுப்பினர்களும் நிர்வாகிகளும் பங்குப் பெற்றனர்.
இக்கூட்டத்தில் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- அனைத்து உறுப்பினர் களுக்கும் சங்கத்தின் அடையாள அட்டை வழங்குவது என்றும் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
- 2023ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் மாநிலத் தலைவரின் அனுமதிப் பெற்று சங்கத்தின் மாநில மாநாட்டினை ஊட்டியில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
- சங்கத்தில் உள்ள தகுதியுள்ள மாவட்டம் மற்றும் தாலுக்கா பத்திரிகையாளர்கள் மற்றும் புகைபடக்காரர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அரசு சலுகைகளை வழங்கிட மாவட்ட ஆட்சித் தலைவரையும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அவர்களையும் நமது மாநில பொதுச்செயலாளர் திரு பாஷா அவர்கள் தலைமையில் மாவட்ட தலைவரும், நிர்வாகிகளும் சந்தித்து பேசுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
- அனைத்து உறுப்பினர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சங்கம் மிக முக்கிய பங்காக இருக்கும் என்றும், தீபாவளியை முன்னிட்டு அனைத்து உறுப்பினா்களுக்கும் இனிப்பு வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
- 2023 ம் வருடம் ஜனவரி மாதம் ஏழை எளிய மக்கள் 25 பேருக்காவது நலத்திட்ட உதவிகள் வழங்குவது எனவும், அரசு பள்ளிகளில் தமிழ் வழி கல்வி பயின்று மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் 10வது மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு ஊக்க பரிசுகள் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
- 2023ம் ஆண்டு நடைபெற உள்ள மாநில மாநாட்டின் போது நலிவடைந்த பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்டங்களும் உதவித்தொகையும் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
- மாவட்டத்தின் அனைத்து துறைகளிலுமிருந்து தகுதியானவர்களை தெரிந்தெடுத்து, மாநில மாநாட்டின் போது, அவர்களுக்கு கேடயமும், நற்சான்றிதழ்களும் வழங்கிட ஆவண செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இச்சிறப்புக் கூட்டத்தினை மாவட்ட தலைவர் திரு.ஜெஸ்லின் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். மாவட்ட செயலாளர் திரு. ஜெரால்டு அவர்கள் உறுப்பினர்களை வரவேற்று சங்கத்தின் தீர்மானங்களை வெளியிட்டார்.
மாநில பொது செயலாளர் திரு. பாஷா அவர்கள் சங்கத்தின் செயல்பாடுகளை குறித்து விளக்கமாக பேசினார். இறுதியில் திரு.பூபதிராஜா அவர்கள் நன்றி கூற இக்கூட்டம் இனிதே நிறைவுப்பெற்றது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு.
No comments:
Post a Comment