சேரங்கோடு சிங்கோன பகுதியை போதை பொருட்கள் பயன்படுத்தாத பகுதியாக காவல் துறை அறிவிப்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 14 October 2022

சேரங்கோடு சிங்கோன பகுதியை போதை பொருட்கள் பயன்படுத்தாத பகுதியாக காவல் துறை அறிவிப்பு.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள சேரங்கோடு சிங்கோன பகுதியை ஆய்வு மேற் கொண்டு  அப்பகுதியை போதை பொருட்கள் பயன்படுத்தாத பகுதியாக  காவல் துறை அறிவிப்பு.

பந்தலூர்   சில வருடங்களாக போதை  பொருட்கள் அதிக அளவு கடந்தப்படுகின்றனர் அப்படி கடந்தப்படும் பொருட்கள் கர்நாடக கேரளா போன்ற பகுதியில் இருந்து கடத்தப்பட்டு  புழக்கத்தில் விடப்படுகிறது பொருட்களின் வினியோகம் அதிக அளவு விற்கப்பட்டு  வருகிறது.

இதனால் பல்வேறு தரப்பினர்கள்  பாதிக்கப்படுகின்றனர் கடந்தப்படும் பொருட்களை வாகனங்களை போலீசார் அவற்றை லாபகரமாக துரித நேரத்தில் பிடிக்க தான் செய்கின்றனர். 

மேலும் போதை பொருட்களை எங்கு விற்பனை செய்யப்படும் என கண்டறிந்து அவற்றை பிடித்து நடவடிக்கை எடுக்கின்றனர். இருந்த போதிலும் போதை பொருட்கள் இன்னும் விற்பனை செய்தான் செய்கின்றனர். இந்த போதை பொருளுக்கு கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் பெரியவர்கள் இலைஞர்கள் என பலரும் உபயோகப்படுத்துகின்றனர். 

இதனை விழிப்பனர்வு மூலம் விழக்க வேண்டும் போதை பொருட்கள் புழக்கத்தில் இல்லாத ஊரை  ஊருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் இன்றைய தினம்  சேரங்கோடு அடுத்துள்ள சிங்கோன என்ற பகுதியில் இன்று காவல்துறையினர் மக்களை  சந்தித்து   போதை பொருட்களின் பழக்கங்கள் இப்பகுதியில் உள்ளதா அதன் தாக்கம் எவ்வாரு உள்ளது என கேட்டறிந்தனர் அதற்கு மக்கள் இந்த பகுதியில் போதை பொருட்கள் பயன் பாட்டில் இல்லை என கூறினர்.

பின்பு அப்பகுதி மக்களை ஒன்றினைந்து போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் போதைபொருட்களை ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம்  போதை பொருட்களுக்கு எதிராக குறல் கொடுப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு  சேரம்பாடி காவல்துறை ஆய்வாளர் அமுதா தலைமை தாங்கினார் எஸ்ஐ முருகேசன் . தலைமைகாவலர் சுஜி, பயிற்சி எஸ்ஐ  ராஜ்குமார், காவலர் முருகன் முதன்மை காவலர் சுரேஷ் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.

- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad