சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 25 ஆண்டுகாலம் சிறை தண்டனையும் 15 ஆயிரம் அபராதம் உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 14 October 2022

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 25 ஆண்டுகாலம் சிறை தண்டனையும் 15 ஆயிரம் அபராதம் உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.

நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 25 ஆண்டுகாலம் சிறை தண்டனையும் 15 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா கோர்ட் அதிரடி.

 

நீலகிரி மாவட்டம் தேவால உட்கோட்டம் தேவாலா சேரம்பாடி கொளப்பள்ளி பகுதியில் வசிக்கும் சுரேஷ்.  என்பவரின் மகன் ஜெயராமன்.  வயது 21. கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 18 வயதிற்கும் கீழான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தேவாலா மகளிர் காவல் நிலைய குற்ற எண் 03/18  u/s  5 (j) (ii), 5 (l) r/w 6 of POCSO Act and 3(1)(w)(i) SC ST Act போக்சோ சட்டத்தின் கீழ் இன்று உதகை மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில் மேற்கண்ட பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 25 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனையும்.  15,000.  ரூபாய் அபராதமும் விதித்து சிறையில் அடைக்கப்பட்டார்.


மேற்கண்ட பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி இன்று 13.10.2022 ஆம் தேதி மகிளா நீதிமன்ற நடுவர் குற்றவாளி ஜெயராமுக்கு i) 5 (j) (ii), 5 (l) r/w 6 of POCSO Act - 20 ஆண்டு கடுங்காவல் மற்றும்  2. 3(1)(w)(i) SC ST Act - 3 ஆண்டுகடுங்காவல் என மொத்தம் 23 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 15,000 அபராதமும் வழங்கியுள்ளார்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad