நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து தற்போது அதிதீவிர மழையாக மாறி இருந்தால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி தமிழக எல்லை பகுதிகளில் ஆரஞ்சு அலாட்டு விடப்பட்டுள்ளது.
இச்சூழலில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் தொடர்ந்து நான்கு நாட்களாக அதிதீவிர கனமழையாக மாறி வருவதன் காரணமாக பல்வேறு பகுதியை குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சொல்வதும் சாலை ஓரங்களில் மரங்கள் விழுவது மண் சரிவு மின் துண்டிப்பு போன்றவை நடந்த வண்ணமே உள்ளது.
இன்னிலையில் கூடலூர் அடுத்துள்ள இருவயல் மூலப் புலா போட்ட பகுதியில் உள்ள ஆதிவாசிகளான குறும்பர் காட்டு நாயக்கர் முல்லு குறும்பர் பனியர் போன்றோர் வாழ்ந்து வருகின்றனர் . இன்னிலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்ததின் காரணமாக ஆதிவாசிகள் இருக்கக்கூடிய இடங்களில் மழை நீர் சூழ்ந்த காரணத்தினால் அப்பகுதியில் உள்ள 70 மக்கள் தொரப்பள்ளியில் உள்ள அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ல இது போன்று பந்தலூர் பகுதியில் மழையினால் வீடுகள் பாதிப்படைந்து இந்த அதி தீவிர மழையால் பொது மக்களுடைய இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட இதனால் மக்கள் பணிகளுக்கு செல்ல முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அம்ரீத் அவறுடைய உத்தரவின் பேரில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன் மற்றும் புகைப்படக்கலைஞர் அருள்தாஸ்.
No comments:
Post a Comment