தேவாலா அரசு மேல்நிலை பள்ளிக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கிய கார்டில்லா நிறுவனம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 August 2022

தேவாலா அரசு மேல்நிலை பள்ளிக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கிய கார்டில்லா நிறுவனம்.

நீலகிரி மாவட்டம். பந்தலூரில் அடுத்துள்ள தேவால பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து தனியார் நிறுவனமான காடில்லா கம்பெனி தேவாலா அரசு மேல்நிலை பள்ளிக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.


நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா தேவாலா பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி இன்றைய தினம் கார்டில்லா நிறுவனத்தின் மூலம் பள்ளி மாணவ மாணவியருக்கு இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ளான பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கீர்த்தி வாசன் தலைமை ஆசிரியர் வரவேற்புரை நிகழ்த்தினார் நீலகிரி மாவட்ட கல்வி அலுவலர் திரு சுடலை ஐயா அவர்கள் தலைமை தாங்கினார்.


நிகழ்ச்சியில் டாக்டர் பரத் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில்  கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெய்சீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மேலும் விழாவில் இருபால் ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளியில்  இங்கே 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது, இந்தப் பள்ளியில் கிட்டத்தட்ட 360 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு தரப்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்  இந்நிலையில்  பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது மிகவும் அரிது இதனை அப்பள்ளியுள்ள தலைமை ஆசிரியர் ரவுசன்மலை எஸ்டேட்டின் உரிமையாளர் பரத் என்பவரிடம் பள்ளிக்கு சுத்தமான குடிநீர் வழங்கிட தங்களால் இயன்ற உதவியை செய்து தருவதாக கேட்டிருந்தார் அதன்படி ஹைதராபாத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படக்கூடிய காடில்லா நிறுவனம் தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 3 லட்சம் ரூபாய் செலவிலான ஒளிபெருக்கி கணினி வாட்டர் சுத்தகரிப்பு இயந்திரம் போன்றவற்றை இன்றைய தினம் வழங்கினார்கள்.


நிகழ்ச்சியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் போன் ஜெயசீலன் அவர்கள் கூறுகையில் நானும் ஒரு தேளைத் தோட்ட தொழிலாளி மகளாக பிறந்தவன் நான் வறுமையில் வாடிய போதும் கஷ்டப்பட்டு நான் படித்தேன் அதுவும் தேவாலா இருக்கக்கூடிய அரசு உண்டு உறைவிட பள்ளியில் பயின்று பின்பு தேவாலா இந்த பள்ளியிலும் பயின்று வந்தவன் என்றும் கஷ்டப்பட்டு படித்ததன் பயனாக நான் வக்கீலாக மாறி பின்பு இப்பகுதி என்னுடைய சட்டமன்ற உறுப்பினராக மாறி இருக்கின்றேன் இதற்கு காரணம் என்னுடைய படிப்பு தான் என்றும் படிப்பை கஷ்டப்பட்டு படித்தாக வேண்டும் அப்பொழுதுதான் நீங்க வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வர முடியும் இதனால் உங்கள் வாழ்வு செழிக்கும் நமது தாய் தந்தையருடைய கஷ்டத்தை உங்களால் மட்டும் தான் போக்க முடியும் அதனால் படிப்பினை விட்டு விடாதீர்கள் என்றும் ஒருநாள் தலைசிறந்த மாணவனாக வரவேண்டும் என்றும் அவரை வாழ்த்தினார்.

 இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட கல்வி அலுவலர் ஐயா சுடலை அவர்கள் கூறிய போது காடில்லா நிறுவனர் பரத்  மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் ஜெயசீலன் ஆகியோர்  நமக்கு இது போன்ற ஒரு நல்ல மனிதர் கிடைத்தது மிகவும் அரிது சட்டமன்ற உறுப்பினர் ஜெயசீலன் ஐயா அவர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதோடு ஏழை எளிய மக்களும் சரி பள்ளி மாண மாணவியாக இருந்தாலும் சரி அவருடைய இன்னல்களை கண்டால் அவர் உடனே உதவி செய்ய முன்வருவார்.


மேலும் இன்றைய தினம் ஐயா அவரிடம் பள்ளிக்கு டெஸ்ட்க் பெஞ்ச் போன்றவை கேட்டிருந்தோம் அதனை உடனடியாக செய்து தருவதாக கூறியுள்ளார். இதேபோல் நம் பள்ளிக்கு செல்லக்கூடிய சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது இதனையும் சரி செய்து தருமாறு கேட்டு இருந்தோம் அதற்கும் ஐயா அவர்கள் ஒப்புக்கொண்டு உடனே இந்த வருடத்திலேயே இந்த சாலை அமைத்து தருவதாக கூறினார் .இப்பேர்பட்ட மாமனிதர் நமக்கு கிடைத்தது மிகவும் பெருமைக்குரிய விஷயம் இதுபோன்ற நல்லவர்கள் நமக்கு உதவிட முன் வரவேண்டும் என்று எடுத்துக் கூறியதோடு உதவிக்கு கரம் நீட்ட ஒரு எடுத்துக்காட்டாக ஐயா திகழ்கிறார் என்று மாவட்ட கல்வி அலுவலர் ஐயா  சுடலை புகழாரம்.

No comments:

Post a Comment

Post Top Ad