​உதகையில் ஜாதி, மதங்களைக் கடந்த சமத்துவ இப்தார் நிகழ்ச்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 March 2026

​உதகையில் ஜாதி, மதங்களைக் கடந்த சமத்துவ இப்தார் நிகழ்ச்சி


 ​உதகையில் ஜாதி, மதங்களைக் கடந்த சமத்துவ இப்தார் நிகழ்ச்சி: நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு


​உதகை, மார்ச் 16: "மனிதாபிமானமே மிகச்சிறந்த அறம்" என்ற உயரிய நோக்கில், நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு மற்றும் நீலகிரி( educational trust) எஜுகேஷனல் டிரஸ்ட் ஏற்பாட்டில் இணைந்து நடத்திய "சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி"


 இன்று உதகை பிங்கர் போஸ்ட் மர்கஸ் பகுதியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.


​நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் வழியில்...

​இந்த இப்தார் நிகழ்வின் போது, மனிதநேயத்தைப் பறைசாற்றும் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் நினைவு கூரப்பட்டன:


​"அண்டை வீட்டார் பசியோடு இருக்கும்போது, தான் மட்டும் உண்பவர் உண்மையான இறை நம்பிக்கையாளர் அல்ல."

​"பிறருக்கு உணவளியுங்கள், ஸலாத்தைப் (சாந்தி, சமாதானத்தை) பரப்புங்கள்; இதன் மூலம் நீங்கள் சொர்க்கத்தில் நுழைவீர்கள்."

​இந்த பொன்மொழிகளுக்கேற்ப, ஏழை எளியோர் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைந்து உணவருந்தும் ஒரு சமத்துவ மேடையாக இந்த நிகழ்வு அமைந்தது.


​தலைமை  இந்த உணர்வுப்பூர்வமான நிகழ்விற்கு நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் ரமணா அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார்.   


 நீலகிரி எஜுகேஷனல் டிரஸ்ட் சார்பில் ஜாபர் ஏற்பாட்டில்  நீலகிரி மாவட்ட சமூகத் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கன்டோன்மென்ட் வினோத் குமார் பிங்கர் போஸ்ட் மர்கஸ் தலைவர் நாசர் அவர்கள் முன்னிலையில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.


​சமத்துவ இப்தார் நிகழ்ச்சி - 2026: உதகையில் (Ooty) நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் "சமத்துவ இப்தார் நிகழ்ச்சி - மிகச் சிறப்பாக  நடைபெற்றது 


சிறப்பு அழைப்பாளர்களாக நிகழ்வில்  மாவட்ட இணை இணைச் செயலாளரும் அன்பு அறிவு பவுண்டேஷன் பிரிட்டோ  கூடலூர் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் நேரு, யுகேந்திரா, ரஞ்சித் .ஏசுதாஸ்.              (, பர் போஸ்) டிரைவன் பவுண்டேஷன் அன்பு அறக்கட்டளை சதீஷ் சுதாகர் (உயிர்க்காற்று அறக்கட்டளை) பால் தயானந்த் ( கேனான் டிரஸ்ட்) ஊட்டி (வாழும் வாழ வைப்போம்) ராகேஷ் & குன்னூர் ஆம்புலன்ஸ்) சல்மான் சுதிர் (மாணவர்கள் எழுச்சி நாயகன்) சமூக ஆர்வலர்கள் பெரியோர்கள் மத நல்லிணக்கச் சங்கமம் எந்தவித ஜாதி, மத வேறுபாடுகளுமின்றி அனைத்து சமுதாயத்தினரும் திரளாகக் கலந்து கொண்ட இந்த இப்தார் விருந்து, நீலகிரி மாவட்டத்தின் மத நல்லிணக்கத்திற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தது. இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து பிற மதத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நோன்பு திறந்து சகோதரத்துவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இத்தகைய நிகழ்ச்சிகள் மக்களிடையே பிரிவினையை அகற்றி, ஒற்றுமையை வளர்க்கும் எனப் பங்கேற்பாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad