சுற்றுச்சூழல் காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 February 2026

சுற்றுச்சூழல் காக்க மாணவர்கள் முன்வர வேண்டும்

 


சுற்றுச்சூழல் காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் 

பந்தலூர்: பிப்., 15 பந்தலூர் அருகே அத்திக்குன்னா அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர் ரகுபதி தலைமை தாங்கினார்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது மனிதர்கள் இயற்கையை சார்ந்து வாழ்கின்றனர். எனவே இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கான வாழ்க்கை முறையில் தேர்வு செய்து கொள்வது அவசியம். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் போது பருவநிலை மாற்றம் ஏற்பட்டு பருவ மழை பொய்த்து போதல், நீர் - மண் வளங்கள் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் உணவு உற்பத்தி பாதிப்பு ஏற்படும். சுத்தமான காற்று கிடைக்காத சூழல் ஏற்படும். இவைகளால் மனிதர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நோயை தாக்கங்களுக்கு ஆளாகும் சூழல் ஏற்படுகிறது. எனவே இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது, ரசாயன பொருட்களை தவிர்ப்பது, மூலிகைச் மற்றும் மண்ணுக்கு சார்ந்த செடிகள் மற்றும் மண்வளம் மிக்க செடிகளை வளர்த்தல், குப்பைகளை முறையாக அகற்றுதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளை மேற்கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார் நிகழ்ச்சியில் ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad