பந்தலூர் அம்மா உணவகத்திற்கு செல்லும் மின் ஒயரை மாற்றி அமைக்க கோரிக்கை
பந்தலூர்அம்மா உணவகத்திற்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பு வயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது. அம்மா உணவகத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் உணவு அருந்த வந்து செல்கின்றனர் . மேலும் பந்தலூர் அரசு மருத்துவமனை மற்றும் நீதிமன்றம், அரசு ஆரம்ப பள்ளி நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்வோரும் இந்த வழியாக சென்று வருகின்றனர் . இந்த மின் வயர்கள் மிகவும் தாழ்வாக செல்வதால் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மின் விபத்துக்கு ஏற்படும் பாதிப்பு உள்ளது. எனவே இந்த மின் வயர்களை பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் உயரமாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment