கோத்தகிரி கார்சிலியில் சிறுத்தை உலா வனத்துறையினர் ஆய்வு.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கார்சிலியில் கன்னேரிமுக்கு ஹட்டியை சேர்ந்த ரொட்டேரியன் ருப்பகாரி தேவராஜ் அவர்களது பங்களா அமைந்துள்ள சாலை பகுதியில் நேற்றிரவு சிறுத்தை உலாவந்ததை படம் பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் வனத்துறை ரேஞ்சர் செல்வராஜ் அவர்கள் தலைமையிலான வனத்துறை குழுவினர் தேவராஜ் அவர்களது பங்களா பகுதியில் பார்வையிட்டனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment