தீபாவளி பண்டிகையின் பொழுது பல்வேறு பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வருகை தர பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது...
தீபாவளி பண்டிகையானது உலகம் முழுவதுமுள்ள இந்தியர்களால் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததன் காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.
பல்வேறு பகுதிகளிலிருந்து தீபாவளி திருவிழாவைக் கொண்டாடுவதற்காகச் சொந்தக் கிராமங்களுக்கு வந்து மக்கள் அனைவரும் பணிகளுக்கும், தொழில் சம்பந்தமாகவும் அவர்களது இடத்திற்குத் திரும்பிச் செல்ல முனைந்தனர். இதனால் கூடலூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.கூட்ட நெரிசலால் பேருந்துகளில் மக்கள் ஏற முடியாமலும் அதிகப்படியான சுமையால் பேருந்து ஒரு பக்கம் சாயும் நிலைமைக்கும் தள்ளப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலூகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாமாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment