பந்தலூர் அருகே உப்பட்டி பகுதியில் மகளிர்களுக்கான சுயத்தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆல் தி சில்ட்ரன் அமைப்பு சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆல் தி சில்ரன் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது மகளிர்கள் வீடுகளில் இருந்து வருவாய் ஈட்டும் வகையில் சிறு தொழில்கள் செய்து பயன்பெறலாம். அதில் மிகக் குறைந்த செலவில் காளான் வளர்ப்பு பணிகள், பத்தி, சூடம், மெழுகுவர்த்தி, உற்பத்தி செய்தல், சோப்பு தயாரித்தல், பெனாயில் தயாரித்தல், ஊறுகாய் தயாரிப்பு, பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து ஜாம்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு சிறு தொழில்கள் மேற்கொள்ள முடியும். இவற்றுக்கான வழிகாட்டல்கள் பயிற்சிகள் பெற்று சுய தொழில் முனைவராக முன்னேற வேண்டும் இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, தரமான பொருட்களை பொதுமக்கள் பெறுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.
ஸ்கல்ப்சர் அகாடமி நிறுவனர் ரவீந்திரன் பேசும்போது மகளிர் சுயதொழில் பெறுவதற்கு எளிதாக கடன்கள் பெற முடியும். அரசும் பல்வேறு திட்டங்கள் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது. சுய உதவி குழுக்கள் மூலமாக வாழ்வாதார இயக்கங்களில் மூலம் தொடர்பு கொண்டு கடன் பெற்று சுய தொழில் செய்து முன்னேற வேண்டும். கற்றுக்கொள்ளும் தொழில்களை முறையாக செயல்படுத்துவதன் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு முன்னேற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் உப்பட்டி அட்டி பகுதியைச் சேர்ந்த மகளிர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C .விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment