கோத்தகிரி ரோட்டரி அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 6 October 2024

கோத்தகிரி ரோட்டரி அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கோத்தகிரி ரோட்டரி சங்கம் ஆனது டயாலிசிஸ் மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கிறது அரசுடன் அதற்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது . ரோட்டரி கோத்தகிரி தலைவர் திரு.B. நஞ்சன், டாக்டர்.H. சிவக்குமார் கோத்தகிரி அரசு மருத்துவமனை தலைமை அறுவை சிகிச்சை நிபுணர், ரோட்டரி கோத்தகிரி திட்ட இயக்குனர் மிளிதேன் திரு. ஜேக்கப் பால், அரசு மருத்துவமனை துணை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். K.J. ஹால்துரை அவர்களால் நிர்வாகிகள் உறுப்பினர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொழுத்தானது.



ரோட்டரி சங்கத்தின் இந்த மாபெறும் திட்டத்திற்க்கு பொதுமக்கள் மனதார பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் குவித்துவருகின்றனர். பயனாளிகள் அதிக தூரம் அதிக செலவு இயலாமை ஆகிய காரணங்களால் அவதியுறும் நிலையில் ரோட்டரி சங்கத்தின் இந்த முயற்ச்சியால் அதிகம் பேர் பயன்பெறுவார்கள் . அதிக முயற்சி எடுத்த கோத்தகிரி ரோட்டரி சங்கத்தின் கன்னேரிமுக்கு திரு. தேவராஜ் காரி மற்றும் அவருடன் இணைந்த நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad