நீலகிரி மாவட்ட தமிழக பத்திரிகையாளர்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் திட்டமிட்டபடி இன்று (24/10/24) மாலை 3.30 மணிக்கு ஊட்டியில் நடைப்பெற்றது.
மாநில பொதுச் செயலாளர் திரு. பாஷா அவர்கள் தலைமையேற்று இக் கூட்டத்தை சிறப்பித்தார்கள். இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், நமது சங்க உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் போன்ற பல காரியங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் நமது சங்க உறுப்பினர்களுக்கு, தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்று மாவட்ட செயலாளர் உறுதிப்பட கூறினார்.
மேலும் நமது மாவட்ட சங்கத்தை சீர்படுத்துவதுக் குறித்த சில கருத்துக்களை மாநில பொதுச்செயலாளர் திரு. பாஷா தெரிவித்தார்கள்.
தொடர்ந்து தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் சார்பில் எதிர்வரும் 29ம் தேதி இனிப்பு மற்றும் காரம் வழங்கி வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்யப் பட்டது.
இன்று நடைப்பெற்ற கூட்டத்தில் புதிதாக மூன்று செய்தியாளர்கள் நமது சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களை அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் வாழ்த்தி வரவேற்றனர்.
முடிவில் நீலகிரி மாவட்ட பொருளாளர் KST மகேந்திரன் அவர்கள் நன்றிக்கூற இன்றைய கூட்டம் இனிதே நிறைவுப் பெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment