கோத்தகிரி -முட்புதர்கள் சூழ்ந்த சாலை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 July 2024

கோத்தகிரி -முட்புதர்கள் சூழ்ந்த சாலை.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கிளப்ரோடு முதல் மிஷன் காம்பவுண்ட் செல்லும் குறுக்கு சாலை டவுனுக்குள் வாகன நெரிசலை கட்டுப்படுத்த அனைவராலும் உபயோகிக்கப்படும் முக்கியமான சாலையாகும். தற்போது பெய்த மழையின் காரணமாக சாலையோரங்களில் முட்புதர்கள் வளர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. நடந்து செல்லவும் முடியாத அளவிற்கு அதிகமாக முட்புதர்கள் சாலையை சூழ்ந்துள்ளது. எனவே கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் இந்தமாற்றுபாதையை சூழ்ந்துள்ள முட்புதர்களை அகற்றி சாலையில் வாகனங்கள் சென்றுவர ஏற்பாடு செய்யவேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad