சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 522 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் சத்துமாவு உண்ணும் 20042 மாணாக்கர்களுக்கு 2024-2025 கல்வியாண்டில் விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தினை உதகை ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் துவங்கி வைத்து மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கினார் சுற்றுலாத் துறை அமைச்சர் கா ராமசந்திரன் அவர்கள்.
இந்நிகழ்வின் போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.லஷ்மி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள்,உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு. கணேஷ் அவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.பொன்தோஸ் அவர்கள், உதகை நகராட்சி தலைவர் திருமதி.வாணீஸ்வரி அவர்கள்
உதகை ஊராட்சி தலைவர் திரு.மாயன் (எ) மாதன் அவர்கள் மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.வ.பிரவீணாதேவி அவர்கள், முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஆர்.கீதா அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், திரு.இரா.சுப்பிரமணி, தொழிற் கூட்டுறவு அலுவலர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment