நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நெடுகுளாவில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு சுயம்புவாக உருவான லிங்கத்தை நெடுகுளா ஊர்மக்கள் பரம்பரையாக கோயில் கட்டி வழிபட்டு வந்தனர்
மலை மேல் அமைந்துள்ள கோயிலில் வருடம் ஒருமுறை நெடுகுளா ஊரைச் சேர்ந்த ஆண்கள் கடும் விரதமிருந்து பூ மிதித்து ஐய்யணுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர்
அது சமயம் படுகர் சமுதாய பாரம்பரிய நடனம் மற்றும் அன்னதானம் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறும்.
நெடுகுளா ஊர் மக்களும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஊர்மக்களும் நீலகிரி மாவட்டம் முழுவதிலுமுள்ள படுக சமுதாய மக்களும் திரளாக கலந்து கொள்வர்.
இன்றளவிலும் ஜெடையசுவாமி ஐய்யனின் அருளால் தண்ணீர் பானையில் தானாக உருவாகும் கருப்பு நிற திருநீர் விழா(கப்பு இக்குவ ஹப்ப) சிறப்பாக நடைபெறும்
பசு கன்று (தபான) பூ குண்டம் இறங்குவதும் எந்த ஊர் கோயிலிலும் இல்லாத தானே உருவாகும் திருநீர்(கப்பு) திருவிழாவும் தனி சிறப்பம்சமாகும்.
வரலாற்று சிறப்பு மிக்க நெடுகுளா ஜெடையசுவாமி கோயில் புனரமைப்பு பணி ஓராண்டுகாலமாக நடைபெற்றது. தற்போது திருப்பணி நிறைவடைந்து வர்ணம் தீட்டும் பணிகள் நிறைவடையும் நிலையில் வரும் ஆகஸ்ட் 19 ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்திற்க்கான ஏற்பாடுகளை நெடுகுளா ஊர் தலைவர் மற்றும் பொதுமக்கள் மிகவும் சுறுசுறுப்பாக செய்துவருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment