இந்தியா T20 உலக கோப்பையை வென்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 30 June 2024

இந்தியா T20 உலக கோப்பையை வென்றது.

 


இந்தியா T20 உலக கோப்பையை வென்றது.

2024ஆம் ஆண்டு ஆடவர் T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது.

ஜூன் 29 ஆம்தேதி மேற்கிந்திய தீவில் பார்படாஸில் நடைபெற்ற மாபெறும் இறுதி போட்டியில் இந்தியாவுடன் தென்ஆப்பிரிக்கா மோதியது.


டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித்ஷர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.


பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் எடுத்தது.


177 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.


7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று இரண்டாம்முறையாக T20 உலக கோப்பை வென்று அசத்தியது.


இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி 1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் 50 ஓவர் உலக கோப்பை வென்றது.


2007 ஆம் ஆண்டில் T20 ஆடவர் உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி 17ஆண்டுகள் கனவான T20 உலககோப்பையை 2024 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக இந்தியா வென்றது நாடு முழுவதிலும் சிறப்புகொண்டாட்டங்கள் நடைபெற்றது.


T20 உலக கோப்பை போட்டியின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பை வென்று சாதனை புரிந்தது.


வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் நீலகிரி மாவட்ட மக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி ஆட்டம் பாட்டத்துடன் இந்தியாவின் வெற்றியை தங்களது வெற்றியாக நினைத்து மகிழ்ந்தனர்..


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad