நீலகிரி மாவட்டத்தில் உதகை நகரில் இன்று.22:6:2024 சனிக்கிழமை காலை ஆஷா களப்பணியாளர்களின் கோரிக்கை கூட்டம். உதகை நகரில் உள்ள ஏ ஐ டி யு சி யின் தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு. ஏ ஐ டி யு சி யின். மாவட்ட செயலாளரின் தோழர் போஜராஜ் அவர்கள் தலைமை வகித்தார் மேலும். உதகை நகர ஏஐடியுசியின் நகர செயலாளர் தோழர் விஜயராஜ். துணை செயலாளர் தோழர் நாகராஜ். மற்றும் ஆசப் பணியாளர்களின். மாவட்ட தலைவி தோழர் வசந்தகுமாரி. மாவட்ட செயலாளர் தோழர் ரீனா. பொருளாளர் தோழர் ஷீலா. மற்றும் ஆஷாப் பணியாளர்களும் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டார்கள்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் தீர்மானிக்கப்பட்டது. மாதம். 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் எனவும். தங்களுக்கு அரசு தரவேண்டிய நிலுவைத் தொகையை விரைவில் தர வேண்டும் எனவும். மேலும் ஆஷாப் பணியாளர்களுக்கு தற்போது உள்ள சீருடை மாற்றி வேறு வண்ண சீருடைய தர வேண்டும் எனவும். இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக நகர செயலாளர் தோழர் விஜயராஜ் நன்றிக்கூறி இந்தக் கூட்டத்தினை நிறைவு செய்து வைத்தார்.
நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment