ஏஐடியுசி ஆஷா பணியாளர்களின். இரண்டாவது மாவட்ட மாநாடு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 30 May 2024

ஏஐடியுசி ஆஷா பணியாளர்களின். இரண்டாவது மாவட்ட மாநாடு.



நீலகிரி மாவட்டம் உதகை நகரில் நேற்று .29:5:2024 புதன்கிழமை காலை 10 மணி அளவில். ஆஷா பணியாளர்களின் மாவட்ட மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு தலைமை தோழர். கே எம் ஆரி மாவட்ட தலைவர். முன்னிலை ஆசாப் பணியாளர்களின் நிர்வாகிகள். வரவேற்புரை தோழர் ஜீவிதா. மாநாட்டின் துவக்க உரை தோழர் வகிதா நிஜாம். தேசிய செயலாளர் ஏ ஐ டி யு சி. வாழ்த்துரை போஜராஜ். சிபிஐ நீலகிரி மாவட்ட செயலாளர். வேலை அறிக்கை தோழர் வசந்தகுமாரி மாநில குழு உறுப்பினர். மற்றும் தோழர்கள். மூர்த்தி நீலகிரி மாவட்ட ஏஐடியுசி செயளாலர். தோழர் மொரச்சன். விவசாயிகள் சங்க நீலகிரி மாவட்ட அமைப்பாளர். தோழர் சுப்பிரமணி. விவசாயிகள் தொழில் சங்க மாவட்ட அமைப்பாளர். தோழர் கவிதா மாதர் சங்க மாவட்ட அமைப்பாளர்.



 மற்றும் 200க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்களும் இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டார்கள் கொண்டார்கள். நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாது. தமிழ்நாட்டின் பல்வேறு ஊரிலிருந்து ஆஷாபணியாளர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். மாநாட்டின் தீர்மானங்களை வெண்ணிலா அவர்கள் முன்மொழிந்தார்கள். இந்த மாநாட்டில். ஆசா பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் ஒன்று. 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருபவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்தபடி. ஆஷா பணியாளர்களை கிராம சுகாதார. செவிலியர்கள் பணி வழங்க வேண்டும். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க வேண்டும். 


வேலை நிமித்தமாக அரசு பேருந்துகளில் பயணிக்கும். ஆஷா பணியாளர்களுக்கு இலவச பேருந்து அடையாள அட்டை வழங்க வேண்டும். தற்போது இருக்கிற சீருடையை மாற்றி மாற்று சீருடை தர வேண்டும். பணியின் போது விபத்தில் உயிரிழக்கும் பணியாளர்களுñக்கு. ரூபாய் 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். பணியின் நிமித்தமாக பல கிலோமீட்டர்கள் நடந்து செல்லும். பணியாளர்களுக்கு வாகன வசதிகள் செய்து தரப்படவேண்டும். பணிக்குசெல்லும்போது அல்லது. பணி செய்யும் இடத்திலோ மனிதர்களாலோ. மிருகங்களாலோ. ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால். அரசு பொறுப்பேற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் பணியாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும். அறுபது வயதில் ஓய்வு பெறுபவர்களுக்கு அரசு ஓய்வூதியம்  வழங்க வேண்டும் என இந்தமாநாட்டின் கூட்டத்தில் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது. மாநாட்டின் நிறைவு பேருரையை தோழர். கே சுப்பராயன் எம் பி. அகில இந்திய துணைத் தலைவர் ஏ ஐ டி யு சி. இறுதியாக நன்றி உரையை தோழர் ரீனா அவர்கள். கூற மாநாட்டின் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad