வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழப்பு காலை உணவு கொடுக்கும்போது வளர்ப்பு யானை மசினி தாக்கியதில் சி எம் பாலன் என்ற பாகன் உயிரிழந்தார்,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு பகுதியில் வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கிய போது சி எம் பாலன் 50 என்ற யானை பாகனை மசினி என்ற வளர்ப்பு யானை தாக்கியதாக கூறப்படுகிறது,
இந்நிலையில் பாலனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாக கூறப்படும் நிலையில் பாலன் இறந்துவிட்டார் இது குறித்து முதுமலை வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் பாலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது இதனால் இங்கு பரபரப்பு நிலவுகிறது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் ராஜா மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment