தேவாலாவில் பகுதியில் உள்ள தாய் நேச அறக்கட்டளை மற்றும் அனைத்து மகளிர் குழுக்கள் நடத்தும் முதலாம் ஆண்டு மகளிர் தின விழா... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 March 2023

தேவாலாவில் பகுதியில் உள்ள தாய் நேச அறக்கட்டளை மற்றும் அனைத்து மகளிர் குழுக்கள் நடத்தும் முதலாம் ஆண்டு மகளிர் தின விழா...

 


நீலகிரி மாவட்டம். தேவாலா பகுதியில் உள்ள தாய் நேச அறக்கட்டளை மற்றும் அனைத்து மகளிர் குழுக்கள் நடத்தும் முதலாம் ஆண்டு மகளிர் தின விழா கோலாகாலமாக கொண்டாட்டம்...

தேவாலாவில் உள்ள தாய் நேச அறக்கட்டளை மற்றும் அனைத்து மகளிர் குழுக்கள் நடத்தும் முதலாம் ஆண்டு மகளிர் தின விழா நிகழ்ச்சியின் முதலில் தேவாலா அரசு மேல் நிலைப் பள்ளியில் இருந்து பேரணி புறப்பட்டது இந்த பேரனியை கூடலூர் சட்ட மன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன் துவங்கி வைத்தார்   பேரணி  தேவாலா முக்கிய வீதி வழியாக பேரணி சென்று இறுதியாக தேவாலா அன்னை தெய்வானை கல்யாண மண்டபத்தை சென்றடைந்தது.  நிகழ்ச்சிக்கு சமுக ஆர்வலர் சாரதா தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் நெல்லியாள நகர மன்ற உறுப்பினரும் மாவட்ட விவசாய தொழில் அணி அமைப்பாளருமான  ஆலன். நகர்மன்ற துறை தலைவர் நாகராஜ் பந்தலூர் திமுக நகர செயலாளரும் நகர்மன்ற உறுப்பினருமான சேகர் இவருடன் வைஜெயந்திமாலா தனம் சாவித்திரி புஸ்பரஞ்சனி  தர்சினி மும்தாஜ் புனித நதி நிகழ்ச்சி தொகுப்பு சாரா விழா சிறப்புரை கூடலூர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி மற்றும் மகளிர் குழுவின் வாழ்த்துரை வழங்குபவர்கள் நந்தினி ராஜாமணி கிருஷ்ணவேணி நகரமன்ற உறுப்பினர் புவனேஸ்வரி வசந்தகுமாரி ரோனிக்கா சாந்தி நாகேஸ்வரி லீலா மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் துவக்கமாக குத்து விளக்கேற்றப்பட்டது  நிகழ்ச்சியில்  திமுக நகரசெயலாளர்  சேகர் கூறுகையில் மகளிர் வாழ்க்கையில் பல கஸ்டத்தை  சந்தித்து வருகின்றனர் இவர்கள் வாழ்க்கயில் முன்னேற்றம் பெற தளபதியார் மகளிருக்காக பல வகை உதவி செய்து வருகிறார் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் பள்ளி படிப்புக்கு ஊக்கத்தொகை  தொழில் முனைவதற்கு வங்கி கடன் விவசாய கடன் தள்ளுபடி நகை தள்ளுபடி குழந்தை மகபேறு பணம் என என்னற்ற சலுகை வழங்கி வருகிறார் என கூறினார். இதே போன்று நகர மன்ற உறுப்பினர் ஆலன் இதே கருத்தை கூறினார். முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில்  இது வரை இப்படி பட்ட மகளிர் விழாவை கண்டதில்லை என்றார் எல்லா பொறுப்பும் மகளிருக்கு தான் உண்டு எனவும் ஒரு மனைவியின் செயலில் தான் ஒரு ஆணின் நடத்தை அமைந்திருக்கும் என்றும் தன் மகன் தாயிடம் தான் பல தேவைகளை கேட்டு பயன் பெருகிறான். ஒரு நல்ல தாயால் அந்த குடும்பம் முன்னேற்றம் பெரும்.


மகளிர்க்காக அரசு பல நலதிட்டங்களையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது குறிப்பாக மகளிர் தொழில் முனைய வங்கி கடன் கல்வி கடன் விவசாய கடன் எனவும் பள்ளி படிக்க தேவையான உதவி  மற்றும் மகப்பேறு உதவி தொகை தாலிக்கு தங்கம் என தளபதியார் மகளிர்க்காக எவ்வளவோ தொகைகளை வழங்கி வருகிறார் அதுப்போல சுழல் நிதி வழங்கி வருகிறார் ஆனால் நம் பகுதியை சார்ந்தவர்கள்தான் இன்னும் வாங்க வில்லை அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன் அதற்கு நீங்கள் முறையாக விண்ணப்பிக்க வேண்டும் என கூறினார் இறுதியாக நிகழ்ச்சியில் நடனம் அரகேற்றப்பட்டது அனைவருங்கும் மதிய உணவு வழங்கப்பட்டது...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad